Salman khan: ஆக்ஷன் காட்சிகளுடன் துவங்கும் சிக்கந்தர்.. சல்மானுடன் இணையும் 2 நாயகிகள்.. 3 வில்லன்கள்

மும்பை: இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்கே 23 படத்தை இயக்கி வருகிறார்/ இந்த படத்தின் சூட்டிங் 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த மாத இறுதியில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங்கிலும் ஏஆர் முருகதாஸ் இணையவுள்ளார்.

ஆக்சன் கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் இணையவுள்ளனர். இந்த படம் கடந்த ரம்ஜான் பண்டிகையின் போது அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையில் படம் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 மற்றும் சல்மான் கானின் சிக்கந்தர் என இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்க உள்ளதாக ஏ ஆர் முருகதாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Salman khan AR Murugadoss

நடிகர் சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.முன்னதாக ரஜினிகாந்த் -நயன்தாரா ஜோடியாக நடித்து வெளியான தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏஆர் முருகதாஸ். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சொதப்பியது. இதையடுத்து சில காலங்கள் படங்களை இயக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார் ஏஆர் முருகதாஸ். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்கே 23 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எஸ்கே 23 படம்: எஸ்கே 23 படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த் ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் நடிகர் சல்மான்கானுடன் இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் ஏஆர் முருகதாஸ். கடந்த ரம்ஜானை ஒட்டி இந்த படத்தின் அறிவிப்பை சல்மான் கான் மேற்கொண்டிருந்தார். அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையையொட்டி இந்த படம் ரிலீசாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் இந்த மாதம் 18ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2 நாயகிகள்: படத்தில் சல்மான் கானுடன் ராஷ்மிகா மந்தனா மற்றும் கரீனா கபூர் என இரண்டு நாயகிகள் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தில் சல்மானுடன் 3 வில்லன்கள் மோதவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகமான ஆக்ஷன் காட்சிகளுடன் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் படத்தின் சூட்டிங் மும்பையில் வரும் 18ம் தேதி துவங்கவுள்ள நிலையில் துவக்கத்திலேயே ஏர் ஆக்ஷன் காட்சிகளுடன் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கி, தர்பார் படங்களை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் மும்பையில் சிக்கந்தர் படத்தின் சூட்டிங்கை மேற்கொள்ளவுள்ளார்.

ஒரே நேரத்தில் இரு படங்கள்: தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தின் சூட்டிங்கில் பிசியாக உள்ள ஏஆர் முருகதாஸ், இடையில் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் அவர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தர்பார் படத்தை தொடர்ந்து இயக்கத்திலிருந்து சிறிது விலகியிருந்த ஏஆர் முருகதாஸ் அடுத்தடுத்த படங்களை பிசியாக இயக்கவுள்ளது அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X