முன்னாள் காதலியிடம் வசமாக சிக்கிய சல்மான் கான்… இன்னும் ஓயாத காதல் விவகாரம் !

மும்பை : பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சல்மான் கான் குறித்து அவரது முன்னாள் காதலி மோசமான கருத்தை பகிர்ந்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் ஹீரோவாக நடித்து வருபவர் சல்மான் கான். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழில் பிக் பாஸை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதைப் போன்று, இந்தியில் பிக்பாஸை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

சல்மான் கான்

சல்மான் கான்

56 வயதாகும் சல்மான் கான்1988ம் ஆண்டு மைனே பியார் கியா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக பிரபலமானார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து பாலிவுட்டில் கலக்கி வரும் சல்மான் இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே உள்ளார்.

ஐஸ்வர்யா ராயுடன் காதல்

ஐஸ்வர்யா ராயுடன் காதல்

Hum Dil De Chuke Sanam திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்தனர். ஆனால், ஐஸ்வர்யா தந்தைக்கும் சல்மான் கானுக்கும் பிரச்சினை ஏற்பட்டதால், இருவரும் பிரிந்தனர். அப்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ஐஸ்வர்யா ராய் சல்மானின் குடிப்பழக்கம் குறித்து அவரின் துரோகம் பற்றி மனம் திறந்து பேசி இருந்தார்.

பல பெண்களுடன் தொடர்பு

பல பெண்களுடன் தொடர்பு

அதே போல கத்ரீனா கைஃப்பையும் சல்மான் காதலித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு யுவராஜ் படப்பிடிப்பின் மீது சல்மான் கத்ரீனாவை அறைந்ததாகச் செய்திகள் வந்தன. சமீபத்தில் கூட சோனாக்ஷி சின்ஹாவுடன் நெருங்கி பழகி வந்ததாகவும் பின்னர் பிரிந்துவிட்டதாகவும் பாலிவுட்டில் தகவல் பரவியது. இப்படி பாலிவுட்டில் பல நடிகைகளுடன் சல்மான் உறவில் இருந்துள்ளார்.

8வருட காதல் முறிந்தது

8வருட காதல் முறிந்தது

இந்நிலையில், சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி 90களில் சல்மான் கானுடன் சேர்ந்து பல நடித்துள்ளார். 8 வருடமாக காதலித்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அதற்கு பிறகு சோமி அலி படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது இவர் அமெரிக்காவில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழக்கு நடத்தும் சமூக ஆர்வலாக உள்ளார்.

உண்மை முகம் விரைவில் தெரியும்

உண்மை முகம் விரைவில் தெரியும்

சோமி அலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், பாலிவுட்டின் ஹார்வி வெயின்ஸ்டைன், உங்கள் முகத்திரை வெளிப்படும். உங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருநாள் வெளியே வந்து உண்மைகளைப் பகிர்வார்கள். ஐஸ்வர்யாராய் பச்சன் போல என்று பகிர்ந்து அதை ஐஸ்வர்யா ராய்க்கும் டேக் செய்துள்ளார். இப்படி சோமி அலி, சல்மான் கானின் உண்மை முகம் நிச்சயம் ஒருநாள் தெரியவரும் என மறைமுகமாக அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X