பிக் பாஸ் தொகுப்பாளருக்கு கொலை மிரட்டல்.. 60 பாடிகார்டுடன் நிகழ்ச்சிக்கு வந்த ஹோஸ்ட்!

மும்பை: பாலிவுட்டில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன.அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வந்தார் சல்மான்.

கடந்த பல ஆண்டுகளாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இவரது ஹோஸ்ட்டிங்கில் இந்த ஷோ மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் 18வது சீசன் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் தென்னிந்திய அளவில் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் பங்கேற்றுள்ளார். தென்னிந்தியாவிலிருந்து முதல் முறையாக இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

salman khan bigg boss hindi 18 show

பாலிவுட் நடிகர் சல்மான் கான்: பாலிவுட்டில் பாலிவுட் பாட்ஷாவாக கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கு இணையான நடிகர் என்றால் அது சல்மான்கான்தான். இங்கு அஜித் -விஜய் போல அங்கும் ஷாருக்கான் -சல்மான்கான் மீது வெறிகொண்ட ரசிகர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து சல்மான்கான் படங்களை கொடுத்து வருகிறார். 58 வயதான நிலையிலும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ள சல்மான் கானின் திருமணம் எப்போதுமே பாலிவுட்டில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான்.

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்: கடந்த பல ஆண்டுகளாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் சல்மான் கான். இவரது ஹோஸ்ட்டிங்கில் இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில் மிகப்பெரிய ரீச்சை பெற்று வருகிறது. தற்போது 18வது சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், முன்னதாக மான் வேட்டை விவகாரத்தில் நடிகர் சல்மான் கானுக்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சல்மான் கானை கொல்வதற்காக 25 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக தெரியவந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு சல்மான் கான் வீட்டின் அருகில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

salman khan bigg boss hindi 18 show

5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்: இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் அவர்களுக்கு ஆயுத சப்ளை செய்தததாக இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் நம்பருக்கு வந்த மெசேஜில் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் 5 கோடி ரூபாய் தர வேண்டும் என்று மர்மநபர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வந்து, சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் 5 கோடி ரூபாய் தர வேண்டும் என்று அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்கத் தவறினால் பாபா சித்திக்கைவிட சல்மான் கான் நிலை மோசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 பாடி கார்டுடன் சல்மான்: இதையடுத்து மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டிற்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடக்கவிருந்த பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவர் உடனடியாக வீடு திரும்பிய நிலையில், நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியில் மிகுந்த பாதுகாப்புடன் சல்மான் கான் கலந்துக் கொண்டார். 60க்கும் மேற்பட்ட பாடி கார்டுடன் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். பாலிவுட்டில் சல்மான் கானுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ள நிலையில், அவரது பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X