சார் பாக்கெட்ல கிளாஸ் இருக்கு.. சல்மான் கானை தடுத்த செக்யூரிட்டி.. ட்ரெண்டாகும் வீடியோ!

மும்பை : பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக நீண்ட காலங்களாக இருந்து வருகிறார் சல்மான்கான்.

பாலிவுட்டில் இவருக்கும் ஷாருக்கானுக்கும் இடையில்தான் போட்டி. ஆனால் இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள்.

சல்மான் கான் பாலிவுட்டில் எந்த அளவிற்கு அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளாரோ, அந்த அளவிற்கு சர்ச்சைகளையும் கொண்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஹீரோ சல்மான்

பாலிவுட் சூப்பர் ஹீரோ சல்மான்

பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக பல ஆண்டுகாலங்களாக நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் இருந்து வருகின்றனர். இவர்களுக்குள் நடிப்பில்தான் போட்டி. ஆனால் இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள். சமீபத்தில் ஷாருக்கான் தன்னுடைய மகன் விஷயத்தில் மிகுந்த மனஉளைச்சலில் சிக்கிய நிலையில், அவரது வீட்டிற்கே நேரில் சென்று ஆறுதல் கூறியவர் சல்மான்.

சர்ச்சை நாயகன்

சர்ச்சை நாயகன்

இவர் எந்த அளவிற்கு அதிகமான படங்களையும் ரசிகர்களையும் கொண்டுள்ளாரோ அதோ அளவிற்கு சர்ச்சைகளையும் கொண்டுள்ளார். கடந்த 1998ல் ஜோத்பூரில் நடந்த சூட்டிங்கின்போது அரியவகை மானை வேட்டையாடிய குற்றத்திற்காக இவர்மீது வழக்குத் தொடரப்பட்டது.

சல்மானுக்கு கொலை மிரட்டல்

சல்மானுக்கு கொலை மிரட்டல்

இதேபோல இந்த சம்பவத்தில் இவர் ஈடுபட்டதற்காக பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் கொலை மிரட்டல் விடுத்த சம்பவங்களும் காணப்பட்டது. பிஸ்னோய் சமூகத்தினரின் புனிதமான அம்சமான அந்த அரியவகை மான்களைதான் சல்மான் வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டது.

துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி

துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி

இதையொட்டி தன்னுடைய சொந்த உபயோகத்திற்கான காரை குண்டு துளைக்காத காராக மாற்றியுள்ளார் சல்மான்கான். தொடர்ந்து தான் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்குமாறு சமீபத்தில் மும்பை போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தார். அவருக்கு தற்போது அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

கிளாசை மறைத்த சல்மான்

கிளாசை மறைத்த சல்மான்

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பாளர் முராத் கேதானி பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட சல்மான்கான், காரிலிருந்து இறங்கும்போது தன்னுடைய ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் கிளாஸ் ஒன்றை மறைத்து வைத்த வீடியோ வெளியானது. அந்த கிளாஸில் ஏதோ திரவமும் உள்ளது.

ஜீன்சில் மறைத்த சல்மான்

ஜீன்சில் மறைத்த சல்மான்

பின்னர் அவர் அரங்கின் உள்ளே செல்லும்போது செக்யூரிட்டி அவரை சோதனையிடும்போது பேண்ட் பாக்கெட்டில் உள்ள கிளாசைப்பார்த்து சார் உங்கள் பாக்கெட்டில் கிளாஸ் உள்ளது எனக்கூறியுள்ளார். ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் திரவத்துடன் கிளாசை சல்மான் வைக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீரா -வோட்காவா?

தண்ணீரா -வோட்காவா?

இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே பேசு பொருளாகியுள்ளது. ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் வைத்த அந்த கிளாசில் இருப்பது தண்ணீரைப் போல காணப்பட்டாலும் கண்டிப்பாக வோட்கா அல்லது ரம் அதில் இருக்கலாம் என்று ஒரு சாராரும், சல்மானின் அபிமானிகள், அது கண்டிப்பாக தண்ணீராகத்தான் இருக்க வேண்டும என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கைகளால் மறைத்த சல்மான்

கைகளால் மறைத்த சல்மான்

அந்த வீடியோவில் அந்த கிளாசை முழுமையாக தன்னுடைய கைகளால் சல்மான் மறைத்துள்ளார். மேலும் பேக்கட்டில் அந்த கிளாசை வைக்கும் அவர் அதை முழுமையாக உள்ளே தள்ளுகிறார். அவருடன் அவருடைய பாதுகாவலர்கள் காணப்படுகின்றனர். மேலும் பக்கத்தில் ஒரு காவலரும் காணப்படுகிறார்.

காவலர்கள் கேள்வி

காவலர்கள் கேள்வி

இதனிடையே சல்மான் காரை விட்டு இறங்கியதும் அந்த கிளாஸ் குறித்து காவலர் கேள்வி எழுப்புவதாகவும் அந்த வீடியோ காணப்படுகிறது. பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக இருந்துவரும் சல்மான் கான், பப்ளிக்காக இப்படி ஒரு கிளாசை எடுத்துவந்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதை அவர் காரிலேயே வைத்துவிட்டு வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X