IIFA Awards: ஷாருக்கான், கரண் ஜோகர் காலில் விழுந்த ராணா டகுபதி.. ஐஃபா உற்சவத்தில் சுவாரஸ்யம்!

சென்னை: சர்வதேசஅளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுவரும் ஐஐஎஃப்ஏ விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டும் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இதில் ஷாருக்கான், கரண் ஜோகர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த விருது விழாவில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய ஆக்கிரமிப்பை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் விழா நடக்கும் யாஷ் தீவில் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் 27ம் தேதி துவங்கி 29ம் தேதிவரை நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்பில் ஷாருக்கான், இயக்குநர் கரண் ஜோகர், ராணா டகுபதி உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளனர்.

shah rukh khan rana dagubatti iifa 2024 awards 2024

ஐஃபா விருதுகள்: ஐஃபா என்று சுருக்கமாக அழைக்கப்படும் சாவதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக நடததப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் அபுதாபியில் யாஷ் தீவில் இந்த விழா உத்சவமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இதன் செய்தியாளர் சந்திப்பில் ஷாருக்கான், கரண் ஜோகர், ராணா டகுபதி உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை ஐஃபா யூடியூப் சேனலில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும சோனி டிவி, ஸ்டார் பிளஸ், கலர்ஸ் டிவி மற்றும் ஜியோ சினிமாஸ் போன்றவற்றின்மூலம் பார்க்க முடியும்.

shah rukh khan rana dagubatti iifa 2024 awards 2024

அபுதாபியில் நடக்கும் நிகழ்ச்சி: அபுதாபியில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் சித்தாந்தி சதுர்வேதி மற்றும் ஸ்ட்ரீ 2 நடிகர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இணைந்து நடத்தவுள்ளனர். மேலும் ஷாருக்கானும் நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி ஐஃபா உத்சவமும், செப்டம்பர் 28ம் தேதி ஐஃபா விருதுகள் நிகழ்ச்சியும் செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை ஐஃபா ராக்ஸ் நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

shah rukh khan rana dagubatti iifa 2024 awards 2024

ஷாருக்கான் பேச்சு: இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய ஷாருக்கான், இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே மேடையேறிய ராணா டகுபதி, அங்கிருந்த ஷாருக்கான் மற்றும இயக்குநர் கரண் ஜோகர் காலில் விழுந்து வணங்கினார். கடந்த 2022ம் ஆண்டில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த பொன்னியின் செல்வன் படம் இந்த விருது விழாவில அதிக விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் அதிகமாக கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்: சுபாஸ்கரன் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில், விருதுகளையும் குவித்து வருகிறது. தற்போது ஐஃபா விருதுகள் விழாவிலும் அதிகமான விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X