Shah rukh khan: ஷாருக்கானின் 2024 பிளான்.. அடுத்தடுத்த படங்களின் பேச்சுவார்த்தை.. விரைவில் அறிவிப்பு!

மும்பை: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியான நிலையில் மூன்று படங்களும் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்துள்ளன. கடந்த ஜனவரியில் வெளியான பதான் படம் 225 கோடி ரூபாய் செலவில் உருவானது. ஆனால் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து ஷாருக்கானுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. ஷாருக்கான் தொடர்ந்து 4 ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நிலையில் பதான் படம் வெளியாகி ஷாருக்கானுக்கு மட்டுமில்லாமல் துவண்டிருந்த பாலிவுட்டிற்கும் சிறப்பாக கைக்கொடுத்தது.

தொடர்ந்து 4 ஆண்டுகள் தன்னுடைய சொந்த பிரச்சினைகளால் நடிக்காமல் இருந்தார் ஷாருக்கான். இதனிடையே நீண்டு காலங்களுக்கு பிறகு வெளியான பதான் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்திற்காக அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான ஜவான் படமும் ஷாருக்கானுக்க தொடர்ந்து 1000 கோடி ரூபாய் வசூலை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் நடித்ததுடன் தயாரிக்கவும் செய்திருந்தார் ஷாருக்கான். இந்தப் படத்தின்மூலம் இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். முதல் படமே அவருக்கு அதிரடி சரவெடியாக அமைந்துள்ளது.

Bollywood Actor Shah rukh khans next movie to be announce soon

நடிகர் ஷாருக்கான்: நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான பதான் சிறப்பான வெற்றியை பெற்றது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியானது. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்த ஷாருக்கான் இடையில் சில படங்களில் கேமியோ ரோல்களில் நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான இந்தப் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. 1000 கோடி ரூபாய் கிளப்பிலும் இடம்பெற்றது. இந்தப் படத்திற்காக அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது.

ஜவான் படம்: தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் ஷாருக்கான் கூட்டணி அமைத்த ஜவான் படம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாகி, சூப்பர்ஹிட்டடித்தது. 1000 கோடி ரூபாய் கிளப்பில் இந்தப் படமும் இடம்பெற்றது. இந்தப் படத்தின்மூலம் இயக்குநர் அட்லீ மட்டுமில்லாமல் நடிகை நயன்தாராவும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர். அனிருத் இசையில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்திற்காக மொட்டையெல்லாம் அடித்து ஷாருக்கான், சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஷாருக்கான் -நயன்தாரா கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்தது.

ஹாட்ரிக் வெற்றி: இந்தப் படங்களை தொடர்ந்து டன்கி படம் ஷாருக்கான் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதத்தில் ரிலீசானது. இந்தப் படமும் சிறப்பான வெற்றியுடன் ஷாருக்கிற்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது. தொடர்ந்து 4 ஆண்டுகள் படங்களை கொடுக்காமல் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றிவந்த ஷாருக்கான், அதிரடியாக அடுத்தடுத்து 3 படங்களை ஒரே ஆண்டில் கொடுத்து அதிகமாக உற்சாகப்படுத்தியுள்ளார். மேலும் சிறப்பான படங்கள் எதுவும் வெளியாகாமல் துவண்டிருந்த பாலிவுட் திரையுலகிற்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படங்கள் குறித்து தெரிந்துக் கொள்ள அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஷாருக்கானின் அடுத்தப்படங்கள்: அடுத்ததாக சுஜோய் கோஷ் இயக்கத்தில் தி கிங் படத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை அவரது ரெட் சில்லீஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதனிடையே பதான் கூட்டணி மீண்டும் அடுத்தப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாருக்கான் -சித்தார்த் ஆனந்த் கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படங்களை தொடர்ந்து பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இன்ஷால்லா படத்தில் ஷாருக்கான் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் அட்லீயும் ஷாருக்கானிடம் 3 கதைகளை கூறியுள்ளதாகவும் அதில் ஒரு கதை, இரட்டை ஹீரோ சப்ஜெக்ட் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு கதையை ஷாருக்கான் தேர்ந்தெடுப்பார் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X