ரூ.12 லட்சம் கடன்.. மனைவி இறந்த விரக்தியில் மனமுடைந்த முதியவர்..சோனு சூட் செய்த தரமான சம்பவம்!

மும்பை: மனைவியின் மருத்துவ செலவுக்கு ரூ.12 லட்சம் செலவு செய்து விட்டு கஷ்டத்தில் இருந்த முதியவருக்கு சோனு சூட் உதவி செய்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தமிழ், ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

Bollywood actor Sonu Sood helped a 65 year old man

தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். குறிப்பாக அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படத்தில் அகோரியாக நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார்.

பாலியவுட் நடிகர் சோனு சூட்: சோனு சூட் கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்தார். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தியதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றனர். அப்போது தாமாக முன்வந்து, கஷ்டப்பட்டவர்களுக்கு வாகன வசதி, உயிர் காக்கும் ஆக்ஸிஜன் உட்பட அனைத்து உதவிகளையும் செய்தார்.

65 வயது முதியவர்: கொரோனா காலத்தில் தொடங்கிய சேவையை சோனுசூட் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறார். விடுமுறை நாட்களில் சுமார் 700 பேர் சோனு சூட் வீட்டிற்கு நேரடியாக வந்து உதவி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த 65 வயது முதியவர் சோனு சூட்டின் உதவியை நாடி உள்ளார்.

தரமான சம்பவம்: முதியவரின் மனைவி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால், அவரின் மருத்துவ செலவுக்காக ரூ.12 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த முதியவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக, அவரது மனைவியும் சமீபத்தில் இறந்துள்ளார். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற முதியவர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். முதியவரின் கதையை கேட்ட சோனு சூட், முதியவர் வாங்கிய கடனை அடைக்க முன்வந்துள்ளார். நடிகர் சோனு சூட்இன் இந்த உதவிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X