ஹீரோவாக அறிமுகமாகும் சுனில் ஷெட்டியின் மகன்... 'தடப்' பட ட்ரெயிலரை வெளியிட்டு வாழ்த்திய கமல்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகன் நடித்துள்ள தடப் படத்தின் ட்ரெயிலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், தொலைக்காட்சி பர்சனாலிட்டி, தொழில் அதிபர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார் சுனில் ஷெட்டி. தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தர்பார் படத்தில் வில்லன்

தர்பார் படத்தில் வில்லன்

12பி படத்தில் பிரதாப் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தார் சுனில் ஷெட்டி. இந்தப் படத்தில் ஹரி சோப்ரா என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருந்தார் சுனில் ஷெட்டி.

நல்ல நட்பு உறவு

நல்ல நட்பு உறவு

மேலும் கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்து வருகிறார் சுனில் ஷெட்டி. இதன் மூலம் பாலிவுட் மட்டுமின்றி அனைத்து மொழி சினமாவிலும் நல்ல நட்பு உறவையும் கொண்டுள்ளார். நடிகர் சுனில் ஷெட்டிக்கு மன்னா ஷெட்டி என்ற மனைவியும் அதியா ஷெட்டி என்ற மகளும் அஹான் ஷெட்டி என்ற மகனும் உள்ளனர்.

ஹீரோவாக அறிமுமாகும் மகன்

ஹீரோவாக அறிமுமாகும் மகன்

இந்நிலையில் சுனில் ஷெட்டியின் மகன் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறார். மிலன் லுதிரியா இயக்கும் தடப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் அஹான் ஷெட்டி. இந்தப் படத்தை சஜித் நடியாவாலா மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இன்று ட்ரெயிலர் ரிலீஸ்

இன்று ட்ரெயிலர் ரிலீஸ்

இந்தப் படம் 2018ஆம் ஆண்டு தெலுங்கில் கார்த்திகேயா கும்மக்கொண்டா நடிப்பில் வெளியான ஆர் எக்ஸ் 100 என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

அஹான் ஷெட்டிக்கு கமல் வாழ்த்து

அஹான் ஷெட்டிக்கு கமல் வாழ்த்து

தடப் படத்தின் ட்ரெயிலரை தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான உலக நாயன் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ஹீரோவாக அறிமுகமாகும் சுனில் ஷெட்டியின் மகன் ஆஹான் ஷெட்டிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

சுடர்விட மனதார வாழ்த்துகிறேன்

சுடர்விட மனதார வாழ்த்துகிறேன்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், எனது இனிய நண்பர் சுனில் ஷெட்டியின் புதல்வர் அஹான் ஷெட்டி 'தடப்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். முப்பதாண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் தந்தையைப் போலவே இவரும் சுடர்விட மனதார வாழ்த்துகிறேன்.. என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X