மீரா மிதுன் பண்ண அதே தவறை செய்து சிக்கிய பிரபல நடிகை.. அதிரடியாக ஆக்‌ஷன் எடுத்த போலீசார்!

மும்பை: பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய பிரபல பாலிவுட் நடிகை யுவிகா சவுத்ரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாருக்கானின் ஓம் ஷாந்தி ஓம், வீரே கி வெட்டிங், தி பவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை யுவிகா சவுத்ரி.

நடிகை மீரா மிதுன் சமீபத்தில் பட்டியல் இன மக்கள் குறித்து யூடியூபில் பேசி சிக்கியதை போலவே இவரும் தற்போது சிக்கி உள்ளார்.

மீரா மிதுனை போல

மீரா மிதுனை போல

தமிழ் சினிமா நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான மீரா மிதுன் பட்டியல் இன மக்கள் சினிமாவில் இடம்பெற்று சினிமாவை கெடுப்பதாக அவதூறு கருத்துக்களை பேசி கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அடைந்தார். சமீபத்தில் தான் அவருக்கு ஜாமின் தர பட்டு வெளியே வந்தார். மீரா மிதுன் செய்த அதே தவறை பாலிவுட் நடிகை யுவிகா சவுத்ரியும் செய்துள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்

பிக் பாஸ் போட்டியாளர்

ஷாருக்கானின் ஓம் ஷாந்தி ஓம், வீரே கி வெட்டிங், தி பவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யுவிகா சவுத்ரி பிக் பாஸ் இந்தி சீசன் 9ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நச் பாலியே எனும் பிரபல நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

கீழ்த்தரமான பேச்சு

கீழ்த்தரமான பேச்சு

யுவிகா சவுத்ரி Vlog மூலம் தனது கருத்துக்களை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் உடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், பட்டியல் இன மக்கள் குறித்து கீழ்த்தரமாக இவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. யுவிகாவின் அந்த வீடியோவுக்கு எதிராக புகார் எழுந்த நிலையில், போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுத்தனர்.

அதிரடி கைது

அதிரடி கைது

அந்த வீடியோ வைரலான நிலையில், ராஜத் கல்சான் என்பவர் SC/ST வன்கொடுமை பிரிவு சட்டத்தின் கீழ் நடிகையின் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பஞ்சாப் போலீசார் நடிகையை அதிரடியாக கைது செய்தனர். இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மன்னித்து விடுங்கள்

மன்னித்து விடுங்கள்

அந்த வார்த்தைக்கான அர்த்தம் எனக்குத் தெரியாமல் பேசிவிட்டேன் நண்பர்களே.. நான் யாரையும் காயப்படுத்தும் நோக்கில் அப்படி பேசவில்லை. எனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் என தனது தவறை உணர்ந்து நடிகை மன்னிப்பு கேட்டதை குறிப்பிட்டு அவரது வழக்கறிஞர் அஷோக் பிஸ்னாய் வாதாடிய நிலையில், பஞ்சாப் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X