Aiswarya Rai :பார்ட்டியில் கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்.. கடைசி வரைக்கும் விடவே இல்லை!
மும்பை : நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்ததுடன் நடிகையாகவும் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்துவந்த அவர், பாலிவுட்டின் முன்னணி நடிகராக சல்மான் கான் உள்ளிட்டவர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
ஒருகட்டத்தில் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தொடர்ந்து சில தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் : கடந்த 25 ஆண்டுகளை கடந்து ஐஸ்வர்யா ராய் திரைத்துறையில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரை சுவீகாரம் செய்துக் கொண்டது சினிமா. இவர் தன்னுடைய 50வது வயதை நெருங்கியுள்ளார் என்பதை இவரே தெரிவித்ததால் வேறு வழியில்லாமல் ரசிகர்கள் நம்ப வேண்டியதாகி விட்டது. கடந்த 1994ம் ஆண்டில் இவருக்கு உலக அழகி பட்டம் கிடைத்தது. தொடர்ந்து சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
இருவர் படத்தில் மோகன்லாலின் ஜோடியாக இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தார். அவை அனைத்துமே ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், ஜீன்ஸ் போன்ற படங்களில் இவரது சிறப்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. ரஜினியுடனும் எந்திரன் படத்தில் நடித்து தான் எப்போதுமே ரசிகர்களின் பேவரைட் என்பதை நிரூபித்தார்.

கடந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து அழுத்தமான நடிப்பால் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருந்தார். இந்தப் படத்தின் ப்ரமோஷன்களிலும் சிறப்பாக ஈடுபட்டார். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வரும 28ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டிலும் ஐஸ்வர்யா கலந்துக் கொண்டார்.
மும்பை திரையுலகில் பார்ட்டிகளுக்கு எப்போதும் குறைவிருக்காது. முன்னணி நடிகர்கள், சிறிய நடிகர்கள், வளர்ந்துவரும் நடிகர்கள் என்ற பாகுபாடின்றி இத்தகைய பார்ட்டிகளில் பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்துக் கொள்வார்கள். அந்த வகையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இத்தகைய பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய் கலந்துக் கொண்டார். மிகவும் அழகான உடையில் அவர் இந்த பாட்டியில் பங்கேற்றார்.
இந்த இரவு நேர பார்ட்டியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய், உடன் பார்ட்டியில் பங்கேற்ற தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்குடன் இணைந்து முதலில் ஆட்டம் போடுகிறார். தொடர்ந்து தீபிகா படுகோனை கட்டிப் பிடித்து ஆடும் ஐஸ்வர்யா ராய், அவரை விடாமல் தொடர்ந்து ஆடுகிறார். ஒரு கட்டத்தில் முத்தமும் கொடுக்கிறார். தீபிகா படுகோனும் கையில் மதுபானத்துடன் ஐஸ்வர்யாவிற்கு சிறப்பாக ஈடுகொடுத்து ஆடும்படியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தில் நந்தினி போன்ற அழுத்தமான கேரக்டரில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். படத்தில் வில்லத்தனம் செய்திருந்தாலும் அதற்கும் அழுத்தமான காரணமும் படத்தில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் ரிலீசும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பிரமோஷன்களிலும் ஐஸ்வர்யா ராய் ஈடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் பார்ட்டியில் அவர் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











