குட்டி வயிறுடன் வலம் வரும் ஆலியா பட்.. படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான போட்டோ!

மும்பை : பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இந்த ஆண்டு துவக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஆலியா பட் ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்

ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இன் லண்டன் எனும் படத்தில் நடித்து வரும் ஆலியா பட் படப்பிடிப்பு தளத்தில் வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் போட்டோஸ் வெளியாகி உள்ளது.

ஆலியா பட்

ஆலியா பட்

பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் தான் பாலிவுட் நடிகையான ஆலியா பட். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக தனது அறிமுகத்தை கொடுத்தார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

பிரம்மாண்ட திருமணம்

பிரம்மாண்ட திருமணம்

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலராக இருந்த ரன்பீர் ஆலியா ஜோடி கடந்த ஏப்ரல் மாதல் 14ந் தேதி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இதையடுத்து, நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக பகிர்ந்து அறிவித்தார். அந்த பதிவில், Our baby ..... coming soon என குறிப்பிட்டு இருந்தார். மேலும் மருத்துவமனையில் செக்கப்பில் உள்ள போட்டோ மற்றும் சிங்கம், பெண் சிங்கம் தனது குட்டியுடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்திருந்தார். இவருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பேபி பம்ப் போட்டோஸ்

பேபி பம்ப் போட்டோஸ்

நடிகை ஆலியா பட் முதன்முறையாக ஹாலிவுட் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இன் லண்டன் படத்தில் நடித்து வருகிறார். அங்கு படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகி உள்ள புகைப்படத்தில் ஆலியா தனது பேபி பம்ப் காட்டுவது போன்ற படங்கள் இடம்பெற்றன. நடிகை லண்டனில் நடைபெற்று வரும் அந்த படத்திற்காக ஆலியா பச்சை நிறத்தில் பேண்ட் மற்றும் சட்டை அணிந்து கொண்டு இருக்கிறார். அந்த போட்டோவில் ஆலியாவின் கர்ப்பான வயிறு அழகாக தெரிகிறது.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

மேலும், ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி. படத்தொகுப்பில் இருந்து தொடர்ச்சியான படங்களைப் பகிர்ந்து வருகிறேன். கல்லின் இதயம் - என் முழு இதயமும் உங்களிடம் உள்ளது. அழகான gal_gadot... எனது இயக்குனர் டாம் ஹார்பர்... jamiedornan இன்று உங்களைத் தவறவிட்டார்... மேலும் மறக்க முடியாத அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. உங்கள் அன்புக்கும் கவனிப்புக்கும் நன்றி என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X