என்ன ஆலியா பட் தேனிலவுக்கு போகலையா?... வைரலாகும் புகைப்படம் !

மும்பை : பாலிவுட் நடிகை ஆலியா பட் திருமணமான சில நாட்களிலேயே படப்பிடிப்புக்கு வந்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டும் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான 'பிரம்மாஸ்திரா' படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினர்.

2018ம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். அதன்பிறகே இருவரின் காதல் விவகாரம் திரையுலகிற்கு தெரியவந்தது.

ரன்பீர் கபூர், ஆலியா பட்

ரன்பீர் கபூர், ஆலியா பட்

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் காதல் விவகாரம் குறித்து குடும்பத்திற்கு தெரியவந்த பிறகும் பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டனர். கிட்டத்தட்ட 5 வருடம் டேட்டிங்கிற்கு பிறகு, இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தனர்.அப்போது கொரோனா 2வது அலை தீவிரமாக இருந்ததால் திருமணத்தை தள்ளிவைத்தனர்.

திருமணம் முடிந்தது

திருமணம் முடிந்தது

இதையடுத்து, மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் ஏப்ரல் 14ந் தேதி ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். கரீனா கபூர், நீது கபூர், கரிஷ்மா கபூர், அயன் முகர்ஜி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அளித்து வாழ்த்தினர்.

திருமணமான ஐந்தே நாளில்

திருமணமான ஐந்தே நாளில்

இந்நிலையில், நடிகை ஆலியா பட் திருமணமான ஐந்தே நாளில், 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி'படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். இணையத்தில் அந்த புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில், இளஞ்சிவப்பு தளர்வான குர்த்தா அணிந்து கொண்டு வந்திருந்த ஆலியா பட்டின் முகத்தில் புது மணப்பெண்ணின் அழகு தென்பட்டது. மேலும், கையில் வைத்திருந்த மருதாணி மற்றும் திருமண மோதிரம் பளிச்சென்று ஜொலித்தது.

தேனிலவு போகலையா ?

தேனிலவு போகலையா ?

இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் தேனிலவுக்கு வெளிநாட்டுக்கு போவீங்கனு பார்த்தா ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டீங்களே? என்று கேள்வி கேட்டு வருகின்றனர். அதே போல, ஆலியா பட்டின் கணவர் ரன்பீர் கபூரும் மீண்டும் வேலையைத் தொடங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X