ஹாலிவுட்டிலும் என்ட்ரியாகும் ஆலியா பட்... யாரோட நடிக்கறாங்க பாருங்க!
மும்பை : பாலிவுட்டில் மட்டுமின்றி டோலிவுட்டிலும் சிறப்பான படங்களில் நடித்துள்ளார் ஆலியா பட்.
சமீபத்தில் இந்தியில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள கங்குபாய் கத்தியவாடி படம் ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்துள்ளது.
பிரம்மாண்டமாக தெலுங்கில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் 25ம் தேதி ரிலீசாக உள்ளது.

நடிகை ஆலியா பட்
நடிகை ஆலியா பட் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார். இவரது நடிப்பில் பல வெற்றிப் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் இந்த வெற்றிகளை பெற்றுள்ளார். இந்தியில் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.

கங்குபாய் கத்தியவாடி படம்
சமீபத்தில் இவரது நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகியுள்ளது கங்குபாய் கத்தியவாடி. பயோ பிக்காக இந்தப் படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் வெளியான ஒரே வாரத்தில படம் 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ்
அடுத்ததாக இவர் நடிப்பில் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள ஆர்ஆர்ஆர் படமும் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திலும் அழுத்தமான கேரக்டரில் ஆலியா பட் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் உள்ளிட்டவற்றின்மூலம் இதை அறிய முடிகிறது.

ஹாலிவுட்டில் ஆலியா பட்
சமீப காலங்களில் பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட்டில் நடிப்பது அதிகரித்துள்ளது. இந்திய ரசிகர்களையும் கவனத்தில் கொண்டு ஹாலிவுட் படங்களில் இவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் வரிசையில் தற்போது ஆலியா பட்டும் ஹாலிவுட்டில் இணைந்துள்ளார். நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஹாலிவுட் படமான ஹார்ட் ஆப் ஸ்டோன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ் தயாரிப்பு
படத்தில் அவருடன் கால் கடோட், ஜேமி டோர்னன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தை டாம் ஹார்ப்பர் இயக்கவுள்ளார். ஆலியா பட்டின் இந்த அடுத்தக்கட்ட பயணத்திற்கு பாலிவுட் நடிகர்கள் பலர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications