விராட் கோலியை ஓரே மூச்சா தூக்கிய அனுஷ்கா..வைரல் வீடியோ !
மும்பை : பாலிவுட் அனுஷ்கா சர்மா தனது கணவர் விரால் கோலியை அப்படியே அலேக்காக தூக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கும் இவர் அவ்வப்போது ஒர்கவுட் வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், இந்த காதல் தம்பதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது.

திருமணம்
பாலிவுட் பிரபல நடிகையான அனுஷ்கா சர்மா ரப் நே பனா தி ஜோடி என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 2017 ம் ஆண்டு இந்திய கிரிகெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.

துவக்க வீரராக
விராட் கோலி. ஐபிஎல் 2021 தொடரையொட்டி சென்னையில் உள்ளார். தொடரின் முதல் போட்டியிலேயே ஆர்சிபி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த தொடரில் விராட் அணியின் துவக்க வீரராக களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் போட்டிக்காக ஆவலுடன் காத்துள்ளனர்.
ஆச்சரியத்தில்
இதனிடையே, அவரது மனைவி அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில் விராட் கோலியை அலேக்காக அப்படியே தூக்கி காண்பித்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல லைக்குகள்
இணையத்தில் வைரலாகி உள்ள இந்த வீடியோவிற்கு விராட் கோலி சிரிப்பு எமோஜியை கமெண்ட் செய்துள்ளார். மேலும் ரசிகர்களும், அனுஷ்காவுக்கு இவ்வளவு பலமா என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் பல ரசிகர்கள் தங்கள் இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











