என் வாழ்க்கை சோகம் நிறைந்தது.. மீண்டு வந்த சிங்கப்பெண்.. பாலிவுட் நடிகை !
சென்னை: பாலிவுட் நடிகையான செலீனா ஜெட்லி தன் வாழ்க்கையில் நடந்த துன்பத்தை மனம் விட்டு பகிர்ந்துள்ளார்
முன்னாள் இந்திய அழகியான செலீனா ஜெட்லி, ஆஸ்திரியாவை சேர்ந்த தொழிலதிபர் பீட்டர் ஹாக் என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். பிறகு துபாயில் செட்டில் ஆகிவிட்டேன். அடுத்த ஆண்டே வின்ஸ்டன், விராஜ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தன..

ஐந்து வருடம் சந்தோசமாக சென்று கொண்டிருந்த நிலையில், மீண்டும் 2017 இல் அவருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அதில் ஒரு குழந்தை பிறந்த உடனே, இதய நோயால் உயிரிழந்துவிட்டது. அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள்ளே எனது தந்தை 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அதே ஆண்டே என் அம்மா புற்றுநோயால் காலமானார். தொடர்ந்து தன் குழந்தை, அம்மா, அப்பா போன்ற முக்கியமான உறவுகள் தன்னை விட்டு பிரிந்த நிலையில் மன அழுத்தத்திற்கு ஆளானேன். சில ஆண்டுகள் கழித்து குறும் படம் ஒன்றில் அவர் நடித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, தொடர்ந்து பல மரணங்களை பார்த்த எனக்கு கேமராமுன் வருவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் சந்தித்த கடினமான நேரங்களில், இந்த கேமரா முன் நிற்பதும் ஒன்றாக எனக்கு இருந்தது. என் நடிப்பு என் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும் நான் நடிக்க வேண்டும் என்பது என் அம்மாவின் ஆசை, அதை நான் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே நான் நடித்தேன்.

தொடர்ந்து என் சொந்தங்களை இழந்தவுடன் நான் பெரும் அளவில் மன அழுத்தத்தில் இருந்தேன். என்னை பார்த்த என் கணவர் துபாயில் இருந்து ஆஸ்திரியாவிற்கு செல்லலாம் என்று கூறினார். அனைவரும் ஆஸ்திரியாவிற்கு சென்று விட்டோம். எல்லா துன்ப நேரங்களிலும் என் கணவர் மட்டுமே எனக்கு துணையாக இருந்து உதவினார் என்றும் அவர் கூறிஉள்ளார்.

வாழ்க்கையில் சின்ன சின்ன துன்பத்திற்கே மனம் உடைந்து போகும் நம் போல் பலருக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பல துன்பங்களை கடந்து மீண்டு வந்த செலினாவை சிங்கப்பெண் என்றே கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications











