தீபிகா படுகோனேவுக்கு குழந்தை பிறந்து விட்டதா? இதுலக்கூடவா வதந்தி.. கடுப்பான ஃபேன்ஸ்!
சென்னை: பிரபலமாக இருப்பதால் எவ்வளவு பிரச்சனை சந்திக்க வேண்டி இருக்கும் என்று சொல்லவே முடியாது. கல்யாணம் ஆனாலும், விவாகரத்து ஆனாலும், ஏன் சும்மா தெருவில் நடந்து போனாலும் அதற்கு ஒரு காரணத்தை சொல்லி பூவைத்து, பொட்டு வைத்து, புடவை கட்டி தெருவில் நடக்க விட்டுவார்கள். அப்படித்தான் நடிகை தீபிகா படுகோனேவுக்கு குழந்தை பிறந்து விட்டதாக போலி வீடியோவை வெளியிட்டு உள்ளனர் சில விஷமிங்கள்.
பாலிவுட்டின் புகழ்பெற்ற நட்சத்திரஜோடிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியினர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ராம்லீலா படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தீபிகா, பல ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தீபிகா படுகோன்: இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தீபிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இவர், தாயானதால் பலர் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இருப்பினும், நாக் அஸ்வினின் இயக்கத்தில் உருவான கல்கி கி.பி 2898 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபிகா, கருப்பு நிறத்தில் மார்டன் உடை அணிந்து வந்து இருந்தார். மேலும், ஹை ஹீல்ஸ் அணிந்து வந்ததை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். கர்ப்ப காலத்தில் இப்படி செருப்பு அணிந்து வரலாமா என கேள்வி எழுப்பினர்.
ஆண் குழந்தை அதிர்ஷ்டம்: அதுமட்டுமில்லாமல், ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை இருந்தால் அதிர்ஷ்டம் என்றும், தீபிகா மற்றும் ரன்வீரின் ஜாதகப்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அவர்களின் வாழ்வின் இளவரசனாகிறான். இளவரசனைப் போன்ற சிறுவன் அவர்களுக்கு நற்பெயரைத் தேடித் தருவான் என்று இணையவாசிகள் குழந்தை பிறப்பதற்கு முன்னே ஜோதிடம் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
வதந்தி: தீபிகாவிற்கு செப்டம்பரில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறி இருக்கும் நிலையில், தீபிகா படுகோனோவுக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் போலி செய்தி ஒன்றை போலி போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர் சில விஷமிகள். இந்த போலி செய்தியைப் பார்த்த தீபிகாவின் ரசிகர்கள் இதுலக்கூடவா வதந்தி பரப்புவீர்கள் என்று கடுப்பாகி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











