Actress Deepika padukone: நடிகை தீபிகா படுகோன் கர்ப்பம்? பாலிவுட்டில் தீயாக பரவும் தகவல்!

சென்னை: பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ளவர் தீபிகா படுகோன். கடந்த 2006ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான ஐஸ்வர்யா என்ற படம் மூலம் சினிமாவில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்த தீபிகா படுகோன், தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்திப் படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன நடித்து வருகிறார். பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார் தீபிகா படுகோன். இவர்களது திருமணம் இத்தாலியில் மிகவும் பிரம்மாண்டமாகவும் கொண்டாட்டமாகவும் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் தீபிகா படுகோன். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் இணைந்து நடித்திருந்த பதான் படம் வெளியாகி 1000 கோடி கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தீபிகா படுகோன் திருமணம் நடந்து 5 ஆண்டுகளை கடந்த நிலையில் இவர் கர்ப்பம் என அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்கள் குறித்து இந்த ஜோடி தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தீபிகா படுகோன் கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bollywood actress Deepika padukone expecting her first baby it seems

நடிகை தீபிகா படுகோன்: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக உள்ளவர் தீபிகா படுகோன். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஆண்டுகளாக படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2006ம் ஆண்டில் ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தில் நடித்து சினிமாவில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்த தீபிகா படுகோன் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தியில் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோன் நடிப்பில் பதான் படம் வெளியானது. இந்தப் படம் 1000 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியது.

தீபிகா -ரன்வீர் ஜோடி: கடந்த 2018ம் ஆண்டில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோ ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் தீபிகா படுகோன். இவர்களது திருமணம் இத்தாலியின் லேக் கோமா நகரில் வில்லா தி பால்பியானெல்லோவில் 2 நாட்கள் தொடர்ந்து நடந்தது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். திருமணத்தை தொடர்ந்தும் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் ஷாருக்கான் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் கர்ப்பமாக உள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தீபிகா படுகோன் கர்ப்பம்?: இந்நிலையில் தற்போது தீபிகா படுகோன் கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. HBOவில் ஒளிபரப்பாகிவரும் தி ஒயிட் லோட்டஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் தீபிகா விலகியுள்ளார். இதையடுத்து அவர் கர்ப்பமாக உள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். தி வீக்கின் ஒரு ஆதாரத்தின்படி தீபிகா தற்போது தனது இரண்டாவது மூன்று மாதங்களில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி முன்னதாக 77வது பாஃப்டா சிவப்பு கம்பளத்தில் தீபிகா படுகோன் தன்னுடைய வயிற்றுப்பகுதியை மறைத்ததாக கூறப்படுவதால் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருமணமாகி 5 ஆண்டுகள்: முன்னதாக தொடர்ந்து 6 ஆண்டுகள் காதலித்துவந்த தீபிகா -ரன்வீர் சிங் கடந்த 2018ம் ஆண்டில் திருமணம் செய்தனர். முன்னதாக சஞ்சய் லீலா பன்சாலியின் ரொமாண்டிக் படமான கோலயன் கி ராஸ்லீலா படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்ட இவர்கள் காதலில் விழுந்தனர். தொடர்ந்து பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் ஆகிய படங்களிலும் இந்த ஜோடி இணைந்து நடித்திருந்தனர். இதனிடையே கடந்த நவம்பர் மாதத்தில் தங்களது ஐந்தாவது திருமண நாளை இவர்கள் இருவரும் பெல்ஜியத்தில் கொண்டாடினர். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியான நிலையில் ரசிகர்களும் இந்த தருணத்தை அவர்களுடன் கொண்டாடினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X