அட.. அதற்குள் வயிறு இவ்வளவு பெருசா ஆகிடுச்சே? கணவருடன் வாக்களிக்க வந்த தீபிகா படுகோனே!

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. இதில், பாலிவுட் நடிகர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வரும் நிலையில், கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா படுகோனே தனது காதல் கணலர் ரன்வீர் சிங்குடன் வாக்குச் சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோனே பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

Bollywood actress Deepika Padukone Flaunts Baby Bump for the First Time

தீபிகா படுகோனே: இதையடுத்து, பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் சில பொருட்களை பதிவு செய்து நடுவில் 'செப்டம்பர் 2024' என்று குறிப்பிட்டு தீபிகா - ரன்வீர் என்றும் இருந்தார். இதனை அடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார். திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் கர்ப்பமாக இருப்பதற்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பேபி பம்ப் போட்டோஸ்: கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பின், வெளியில் தலைகாட்டாமல் இருந்த, தீபிகா, மகாராஷ்டிராவில் நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலுக்கான 5 ஆம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தனது கணவர் ரன்வீர் சிங்குடன் வந்திருந்தார். கணவன் மனைவி இருவருமே வெள்ளை நிறத்தில் சட்டையும், க்ரே நிறத்தில் பேண்டும், கூலிங் கிளாசும் அணிந்து வந்திருந்தனர். கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை காரில் பாதுகாப்பாக கை தாங்கலாக அழைத்து சென்றார் ரன்வீர். நடிகை தீபிகா படுகோனே முதன் முதலாக தனது பேபி பம்பைக் காட்டி, அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து சிரித்தபடி சென்றார். அங்கிருந்த பலரும் தீபிகாவிற்கு வாழ்த்துக்களை கூறினார்கள்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி: கடந்த சில மாதங்களுக்கு முன், தீபிகா படுகோனே இன்ஸ்டாகிராமில், தனது திருமண படங்களை நீக்கிய பின்னர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விரிசல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் பரவியது. இதையடுத்து, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபிகா, தனது திருமண மோதிரத்தை காட்டி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X