ரன்வீர் சிங்கை காதலித்த போதும்.. 5 பேருடன் டேட்டிங் சென்றேன்... அதிர்ச்சியை கிளப்பிய தீபிகா படுகோன்!
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கை காதலித்த போதும் 5 பேருடன் டேட்டிங் சென்றேன் என அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.
நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் 6 ஆண்டுகளாக காதலித்து பின் 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இருவரும் மும்பையில் ரன்வீரின் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோன் பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.
ரன்வீர் சிங்-தீபிகா படுகோன்: கடந்த சில மாதங்களாக ரன்வீர் சிங்கும், தீபிகாவும் மனம் ஒத்து வாழவில்லை என்றும், இருவருக்கும் இடையே உறவில் இடைவெளி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன.
3 ஆண்டு உறவு: இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான கரண் ஜோஹரின் காபி வித் கரண் சீசன் 8-ல் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் கலந்து கொண்டார்கள். அப்போது, ரன்வீர் சிங், நான் தீபிகாவிடம் காதலை சொல்லுவதற்கு முன் 3 ஆண்டுகள் ரகசிய உறவில் இருந்தோம். அதன் பின் 2015ம் ஆண்டு தான் அவளிடம் என் காதலை சொன்னேன்.
மாலத்தீவில் நடுக்கடலில் வைர மோதிரத்தை போட்டு என் காதலை சொன்னேன். இயற்கைக்கு நடுவே காதலை சொன்ன தருணத்தை என்னால் மறக்கவே முடியாயது என்று தனது காதல் அனுபவத்தை ரன்வீர் சிங் கூறினார்.
5 பேருடன் டேட்டிங்: இதையடுத்து, டேட்டிங் குறித்து பேசிய தீபிகா படுகோன், நான் ரன்வீர் சிங்கை காதலித்துக் கொண்டு இருந்த போதே, 5 பேருடன் டேட்டிங் சென்றேன் என்று அதிர்ச்சியான பதில் அளித்தார். இதை கேட்டு ஷாக்கான ரன்வீரின் முகம் அப்படியே மாறி நிகழ்ச்சியின் போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கரன் ஜோஹர் தலையிட்டு அதை திசை திருப்பினார்.
சர்ச்சையில் சிக்கிய தீபிகா: ரன்வீர் சிங் உடன் தான் உறவில் இருக்கும் போதே ஐந்து பேருடன் உறவில் இருப்பதாக வெளிப்படையாக பேசியது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, அனைவரும் தீபிகாவை படுமோசமாக ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், சிலர் நல்லா இருந்த குடும்பத்திற்குள் சண்டையை மூட்டிவிட்டுடீங்களே என பலர் கரணை திட்டிதீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











