ஷாருக்கான் கூட பல படங்களில் நடித்த நடிகை.. 20 வயசில் கல்யாணம்.. 2 முறை விவாகரத்து!
சென்னை: சினிமா வாழ்க்கை என்பது பல வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாயாஜால உலகமாகும். இந்த மாய உலகில் நட்சத்திரமாக ஜொலித்தவர்களும் உண்டு. இருந்த இடமும், வந்த தடமும் தெரியாமல் தொலைந்து போனவர்களும் உண்டு. அப்படி, பாலிவுட்டில் மாஸ் ஹீரோவான ஷாருக்கானுடன் பல படத்தில் நடித்த நடிகை இப்போது எங்கே இருக்கிறார் என்று தேடும் அளவிற்கு, சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கிறார். அவர் யார் என்று பார்க்கலாம்.
பாலிவுட் சினிமாவில் பெயரை சம்பாதிப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அப்படி பெயரை சம்பாதித்தவர் தான் தீப்ஷிகா நாக்பால். இவர் 1993 ஆம் ஆண்டு கானூன் என்ற இந்தி சீரியலில் நடித்தார். இந்த சீரியல் அப்போது சன் தொலைக்காட்சியில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. அதே போல, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த சக்திமான் தொடரிலும் ஒரு முக்கியமான ரோலில் தீப்ஷிகா நாக்பால் நடித்திருந்தார். இந்த தொடர் மொழி மாற்றம் செய்யப்பட்டு தூர் தர்ஷனில் ஒளிபரப்பானது.

இப்படி,தொலைக்காட்சியில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த இவர், கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தைத் தொடர்ந்து பீட்டாஜ் பாட்ஷா, ராணி ஹிந்துஸ்தானி, கரண் அர்ஜுன் நடித்து வந்த இவருக்கு ஷாருக்கான நடித்த கொய்லா திரைப்படம் பெயரை வாங்கிக் கொடுத்ததால் அடுத்தடுத்த படங்களில் தீப்ஷிகா நாக்பால் கமிட்டானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷாருக்கானுடன் பல படத்தில் நடித்த இவர், சல்மான் கான், அனில் கபூர், அஜய் தேவ்கான போன்ற பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார்.
தீப்ஷிகா நாக்பால்: பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த இவரின் சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே இருந்தது. தனது 20வது வயதில் ஜீத் உபேந்திராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் பத்து ஆண்டுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக 2007ம் ஆண்டு பிரிந்தனர். இதையடுத்து, 2012ம் ஆண்டு இந்தூரைச் சேர்ந்த கேசவ் அரோராவை மணந்தார். இயக்குநரான அரோராவின் யே தூரியன் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து அவரை மணந்தார். ஆனால், அந்த திருமண வாழ்க்கையும் நீடிக்காமல் 2016ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனது குழந்தைகளான வேதிகா மற்றும் விவான் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.

மோனிசா என் மோனலிசா: 46 வயதான இந்த நடிகை ஒரு காலத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்து கொடிகட்டி பறந்தார். தற்போது படவாய்ப்பு இல்லாததால் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்தார். அதே போல இந்தி பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டார். நடிகை தீப்ஷிகா நாக்பால் டி ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான மோனிசா என் மோனலிசா படத்தில் மும்தாஜின் தோழியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











