சிவப்பு பிகினியில் சூட்டை கிளப்பிய ஈஷா குப்தா... உருகும் ரசிகர்கள்!
மும்பை : தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் பாலிவுட்டை அதிரவைத்து வருகிறார் நடிகை இஷா குப்தா.
தான் நடிக்கும் திரைப்படங்களில் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை தொடர்ந்து குஷி படுத்தி வருகிறார்.
டோட்டல் டமால் வெற்றிக்கு பிறகு, தேசி மேஜிக் மற்றும் ஹேரா பேரி 3 போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

மாடல் அழகி
மாடல் அழகியான இஷா குப்தா,2007 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். மேலும் மிஸ் இந்தியா சர்வதேச பட்டத்தை வென்றார். இதையடுத்து, திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை இவர் பெற்றார்.

ஜனாத் 2
2012 ஆம் ஆண்டில் ஜனாத் 2 என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத் துறையில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்ததற்காக சிறப்பு அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதுக்கு இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்த திரைப்படம் இவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.
Recommended Video

கவர்ச்சி கன்னியாக
பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயம், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் வந்து செல்கிறார். அனைவரையும் கவர்ந்து வரும் இஷா குப்தா பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் கவர்ச்சி கன்னியாக உள்ளார்.

தொடர்ந்து வாய்ப்புகள்
ஏராளமான இந்தி திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் இஷாவுக்கு, 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழியிலும் உருவான யார் இவன் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கும் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

ஒரே ஒரு பாடலுக்கு
அதன்பின் நடிகர் ராம்சரண் நடித்த Vinaya Vidheya Rama என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு வந்து ஏக்கு பார் ஏக்கு பார் என குத்தாட்டமும் போட்டுச் சென்ற இவர். அதைத்தொடர்ந்து இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற டோட்டல் டமால் என்ற திரைப்படத்தில் நடித்து பல பாராட்டுக்களையும் வாங்கி குவித்தார்.

ஓவர் கவர்ச்சி
பாலிவுட்டில் எப்போதும் பரபரப்பாக நடித்து வரும் இஷா குப்தா ஏற்கனவே பல கவர்ச்சிப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார் சமீபத்தில், இவர் கருப்பு பிகினியில் தலையில் தொப்பியுடன் சூரிய குளியல் போட்ட புகைப்படம் இணையத்தில் தாறுமாறாக வைரலானது.

சட்டை பட்டனை கழட்டி செல்ஃபி
அதேபோல சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகு மொத்தமும் தெரியும் படி கண்ணடியை பார்த்து செல்ஃபி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தை அல்லோலகல்லோலப் படுத்தியது. அம்மணியின் அழகை பார்க்க இரண்டு கண்ணு போதாது என்று ரசிகர்கள் ஜொள்ளுவிட்டனர்.

சிவப்பு நிற பிகினியில்
தற்போது, இஷா குப்தா சிவப்பு நிற பிகினியில் நச்சுனு போஸ் கொடுத்து அனைவரையும் உச்சுகொட்டவைத்துள்ளார். இந்த புகைப்படம் ஏராளமான கமெண்டுகளை பெற்று வருகிறது. ஸ்பெனில் ஓய்வு எடுத்து வரும் ஈஷாவுக்கு மிகவும் பிடித்த உடை பிகினி. இதனால் இவர் பல நேரங்களில் பிகினியில் காட்சி அளிக்கிறார்.

ஏராளமான ரசிகர்கள்
திரைத்துறையில் நுழைந்து 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஈஷா குப்தா, வலைத்தளத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இன்ஸ்டாவில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 5.3மில்லியனாக உள்ளது. தன்னை நம்பிய ரசிகர்களை ஏமாற்றாமல் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











