ஒரு கையில் கிளாஸ்.. மறுகையில் ஸ்நாக்ஸ்.. உதட்டை சுழித்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!

மும்பை : நடிகை ஜான்வி கபூர் அடுத்தடுத்த படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனிகபூருக்கு பிறந்த இவர், தன்னுடைய நடிப்பால் புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்து வருகிறார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான குட்லக் ஜெர்ரி படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூருக்கு பிறந்தவர் நடிகை ஜான்வி கபூர். ஸ்ரீதேவி சமீபத்தில் மரணமடைந்த நிலையில், தன்னுடைய அம்மா இருந்தபோதே நடிப்பதற்கு தயாராகிவிட்டார் ஜான்வி கபூர். தன்னுடைய அம்மாவின் இறப்பு இவரை மிகவும் அதிகமாகவே பாதித்ததை இவரது பதிவுகள் மூலம் நாம் உணர முடிகிறது.

கைகொடுக்காத படங்கள்

கைகொடுக்காத படங்கள்


இதையடுத்து கஞ்சன் சக்சேனா : தி கார்கிள் கேர்ஸ், ரூகி, குட்லக் ஜெர்ரி போன்ற படங்கள் ஜான்வியின் நடிப்பில் வெளியாகின. ஆனால் இந்தப் படங்களும் இவருக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை. இதில் குட்லக் ஜெர்ரி படம், தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்காக வெளியானது.

நவம்பர் 4ல் வெளியாகும் மிலி

நவம்பர் 4ல் வெளியாகும் மிலி

ஆனால் தமிழில் பெற்ற வரவேற்பை இந்தப் படம் பாலிவுட்டில் பெற தவறிவிட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மிலி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜான்வி கபூர். இந்தப் படம் நவம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி படம்

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி படம்

இந்தப் படத்தை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இந்தப் படத்தில் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இல்லத்தரசியாக அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தையொட்டி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தான் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

ரசிகர்களை கவர்ந்த வீடியோ

ரசிகர்களை கவர்ந்த வீடியோ

இந்த வீடியோ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் தன்னை வெற்றிப்பட நடிகையாக நிரூபிக்கும் என்றும் இந்தப் படத்திற்காக முன்னதாகவே தன்னை தயார்படுத்திக் கொள்வதாகவும் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார்.

சர்ச்சைக்குரிய புகைப்படங்கள்

சர்ச்சைக்குரிய புகைப்படங்கள்

இதனிடையே சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக காணப்படும் ஜான்வி கபூர், தொடர்ந்து கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது அதுபோல சர்ச்சைக்குரிய புகைப்படங்களைதான் பதிவிட்டுள்ளார்.

ஹாட் ட்ரிங்க்ஸ் எடுத்த ஜான்வி

ஹாட் ட்ரிங்க்ஸ் எடுத்த ஜான்வி

இதில் கேன்டில் லைட் டின்னருக்கு தயாராகிறார் ஜான்வி. மெழுகுவர்த்திகள் எரிய, பக்கத்தில் ஹாட் டிரிங்ஸ் அடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஒரு கையில் கிளாஸ் மற்றும் ஹாட்ரிங்சையும் மறுகையில் ஸ்னாக்சையும் ஏந்தியபடி காணப்படுகிறார். மேலும் உதட்டை சுழித்தப்படியும் போஸ் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X