Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தமிழ் பட நடிகரிடம் வாய்ப்பு கேட்ட ஜான்வி கபூர்.. வெட்கப்பட்ட நடிகர்!
மும்பை : பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் படங்களில் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகர்களின் ஃபேவரிட் சாய்ஸ் ஆக ஜான்வி கபூர் தொடர்ந்து இருந்து வருகிறார் முன்னணி நடிகைகளுடன் போட்டியிடும் அளவிற்கு இவர் வளர்ந்துள்ளார்.
மலையாளத்திலிருந்து ஹெலன் மற்றும் தமிழிலிருந்து கோலமாவு கோகிலா ஆகிய படங்களின் ரீமேக்குகளில் இவர் நடித்துள்ளார். ஆயினும் இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களைளே இவருக்கு பெற்று தந்துள்ளன.
வெளியானது இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மிரட்டல் சேனாபதி கெட்டப்பில் கமல்!

பாலிவுட் நாயகி ஜான்வி கபூர்
கோலிவுட்லிருந்து பாலிவுட் வரை சிறப்பான பல படங்களில் நடித்து இந்திய அளவில் சிறந்த நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. இதே போல பல முன்னணி படங்களை தயாரித்தவர் போனிகபூர். இவர்கள் இருவரின் மூத்த மகளாக ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.

ரீமேக்குகளில் ஜான்வி கபூர்
தமிழின் கோலமாவு கோகிலா மலையாளத்தின் ஹெலன் ஆகிய வெற்றிப் படங்களின் ரீமேக்குகளில் இவர் நடித்துள்ளார். பாலிவுட்டில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இவர் கமிட் ஆகி நடித்து வருகிறார். முன்னணி ஹீரோக்களின் பெஸ்ட் சாய்சாகவும் இவர் உள்ளார். இதே போல தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார்

தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம்
இவரது அழகு மற்றும் திறமை உள்ளிட்ட காரணங்களுக்காக இவரை தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் இவரும் சிறந்த கதைக்களம் அமைந்தால் தென்னிந்திய மொழிகளில் நடிப்பார் என்றே தெரிகிறது.

ஜான்வியை கவர்ந்த நானும் ரவுடிதான்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆண்டில் விஜய் சேதுபதி -நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தை இவர் இதுவரை 100 தடவைகள் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு இந்த படத்தின் கேரக்டர்கள் இவரை மிகவும் இம்ப்ரஸ் செய்துவிட்டதாம். இந்த படத்தில் விஜய் சேதுபதி மிகவும் காமெடியாக நடித்திருப்பார். குறிப்பாக அவர் பேசும் வசனங்கள் மிகவும் காமெடியாக அமைந்திருக்கும்.

ஜான்விக்கு பிடித் விஜய் சேதுபதி
ஹலோ மிஸ்டர் ஒயிட் வசனம் ஜான்வி கபூருக்கு மிகவும் பிடித்தமான வசனமாம். இதேபோல சூப்பர் ட்யூலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பும் ஜான்வி மிகவும் பிடித்துள்ளதாம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மிகவும் அருமையாக நடித்திருப்பார் என்று தனது பேட்டியில் ஜான்வி தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியிடம் பேசிய ஜான்வி
இதையடுத்து விஜய் சேதுபதியின் நம்பரை ஒருவரிடம் இருந்து பெற்று அவரிடம் பேசியுள்ளார் ஜான்வி கபூர். தான் விஜய் சேதுபதியின் சிறந்த ரசிகை என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஜான்வி கபூர், அவரது அடுத்த படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான ஆடிஷனில் தான் கலந்து கொள்வேன் என்று கூறியுள்ளார். தான் விஜய் சேதுபதியுடன் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வெட்கப்பட்ட விஜய் சேதுபதி
இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதியோ ஐயோ ஐயோ என்று சொல்லிக் கொண்டிருந்ததாகவும் அவர் வெட்கப்பட்டாரா என்று சரியாக தெரியவில்லை என்றும் ஆனால் ஆனால் தான் மிகவும் ஆர்வத்துடன் பேசியதால் அவர் ஆச்சரியம் அடைந்திருப்பார் என்றும் ஜான்வி கபூர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்

விரைவில் தமிழில் ஜான்வி?
அழகான மற்றும் திறமையான நடிகையாக பாலிவுட்டில் வளம் வந்து கொண்டிருக்கும் ஜான்வி கபூர் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளமும் அவருக்கு உள்ளதால் அவர் தமிழ் மொழி படங்களில் நடித்தால் அது கண்டிப்பாக அந்த படத்திற்கு சரியான ரீச்சாக அமையும் என்பதில் ஐயமில்லை. மிக விரைவில் தமிழுக்கு அழகான ஒரு நடிகை கிடைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.