Don't Miss!
- News
"பந்தாடறாங்களே" அந்த கட்சியை.. "அடமானம்" வேற வச்சிட்டாங்க.. ஹாட் அதிமுக.. கி.வீரமணி சொல்றது புரியுதா
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தென்னிந்திய படங்கள்ல நடிக்க ஆர்வமா இருக்கிறேன்.. எந்த பாலிவுட் நாயகி சொல்லியிருக்காங்க தெரியுமா?
மும்பை : இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் தற்போது தென்னிந்திய மொழிப் படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
பாலிவுட் ஹீரோக்கள் நேரடியாக தமிழ் இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பல தென்னிந்திய மொழிப் படங்களை ரீமேக் செய்து அதில் பாலிவுட் நாயகர்கள் நடித்து வருகின்றனர்.
சென்னை,
ஐதராபாத்தில்
திடீர்
தியேட்டர்
விசிட்..
ரசிகர்கள்
ஆரவாரம்..
கண்கலங்கிய
கார்கி
நாயகி!

தென்னிந்திய மொழிப்படங்கள்
இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தற்போது தென்னிந்திய மொழிப் படங்கள் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தென்னிந்திய மொழிப் படங்களின் ஆதிக்கம் வடக்கில் காணப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் பாலிவுட்டின் பல படங்கள் முடங்கியுள்ளன. அந்தப் படங்களில் சரியான திரைக்கதை இல்லாமல் அவை திணறி வருகின்றன.

சொதப்பிய பச்சன் பாண்டே
இதனால் தென்னிந்திய மொழிப் படங்களை ரீமேக் செய்து அதில் முன்னணி பாலிவுட் ஹீரோக்கள் களமிறக்கப்படுகிறார்கள். ஆனால் அதிலும் ஒரிஜினலில் கிடைக்கும் சிறப்பாக அனுபவத்தை தர பாலிவுட் இயக்குநர்கள் தவறிவிடுவதால் அதிலும் சொதப்பலே காணப்படுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் பச்சன் பாண்டே.

ரசிகர்களை கவர்ந்த படங்கள்
தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகிர்தண்டாவை ரீமேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் மிகுந்த சொதப்பலான அனுபவத்தையே ரசிகர்களுக்கு கொடுத்தது. இதனால் பாலிவுட்டில் ஆர்ஆர்ஆர், கேஜிஎப்2, விக்ரம் போன்ற படங்கள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வசூலையை கவர்ந்துள்ளன.

ஜான்வி கபூர் ஆர்வம்
இந்நிலையில் தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க பாலிவுட் நடிகர், நடிகைகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் போனிகபூர் -ஸ்ரீதேவியின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பெற்றுள்ளார்.

குட்லக் ஜெர்ரி படம்
தற்போது தமிழில் கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் இந்தியில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நயன்தாரா கேரக்டரில் இவர் நடித்துள்ளார். விரைவில் ரிலீசாக உள்ள இந்தப் படத்திற்கு குட் லக் ஜெர்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம்
இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக பேசிய ஜான்வி கபூர், தென்னிந்திய ரீமேக்கில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடிக்க தான் மிகுந்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தென்னிந்திய மொழிப்படங்கள் தற்போது அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.