Kajol: 50 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. கஜோலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

சென்னை: நடிகை கஜோலின் அட்டகாசமான போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.

அனைவரும் விரும்பக்கூடிய நடிகைகளில் ஒருவராக கஜோல், தனது அற்புதமான நடிப்புத் திறன் மற்றும் தனது அழகால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Bollywood actress kajol photoshoot trending on social media internet

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ராசியான ஹீரோயின்களில் நடிகை கஜோலுக்கு தான் முதல் இடம்.

பாஸிகர் ஹீரோயின்: நடிகை கஜோல் பகுடி என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின், ஷாருக்கானுடன் இணைந்து பாஸிகர் படத்தில் நடித்தார். இந்த பட பாலிவுட் சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்தமான திரைப்படமாக தற்போது வரை இருந்து வருகிறது. அதே போல கஜோல் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே பல ஆண்டுகள் தியேட்டரில் ஓடியது.

வேலையில்லா பட்டதாரி 2: இப்படி பாலிவுட்டில் மாஸ் காட்டி வந்த கஜோல், மின்சார கனவு படத்தில் நடித்து தமிழ் ஆடியன்சின் மனதில் இடம்பிடித்தார். தமிழில் அவர் ஒரு படம் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் இன்று வரை மறக்கவில்லை. நடிகை கஜோல் பல ஆண்டுகளுக்கு பிறகு வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார்.

காதல் திருமணம்: Gundaraj என்ற படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்த போது காதலித்தனர். இதையடுத்து, 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அஜய் தேவ்கனின் வீட்டில் திருமணம் நடந்தது. கஜோல், அஜய் தேவ்கனுக்கு நியாசா என்கிற மகளும், யுக் என்கிற மகனும் இருக்கிறார்கள். கஜோலுக்கும், அஜய் தேவ்கனுக்கும் திருமணமாகி 24 ஆண்டுகள் ஆனபோதும், தற்போதும் இருவரும் க்யூட்டான தம்பதிகளாக உள்ளனர்.

உங்களுக்காக 50 வயசு: திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் நடிகை கஜோல், அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் போட்டோஷூட்களை எடுத்து வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது இவர், மெல்லிய புடவையில் இருக்கும் க்யூட்டான போட்டோவை ஷேர் அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் 50 வயதிலும் குறையாத அழகு என்றும், உங்களுக்காக 50 வயசு என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X