நடிகை கங்கனா ரணாவத்தின் அசையும்.. அசையா சொத்து எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: 35 வயதான நடிகை கங்கனா ரணாவத் கடந்த 2006 ம் ஆண்டு வாக்கில் சினிமாவில் என்ட்ரியானார். இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கங்கனா ரணாவத் பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அரசியலில் குதித்து இருக்கும் இவர், வேட்பு மனு தாக்கலில் தனது சொத்துக்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். இந்தி திரையுலகில் மட்டுமன்றி, சினிமாவில் பொதுவாக நடக்கும் அரசியலிலும் தலையிட்டு தனது கருத்துகளை கூறுவது இவரது வழக்கம். அவ்வப்போது பொது அரசியலும் பேசுவார். இந்திய திரையுலகின் தைரியமான நாயகிகளுள் ஒருவர் கங்கனா என பலரால் பாராட்டப்படுகிறார்.

Bollywood actress kangana ranaut asset property value and bank details

கங்கனா ரணாவத்: இரண்டு தேசிய விருதை பெற்ற இவர் எமர்ஜென்சி' என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அதில் வரும் கதைக்களம் எமர்ஜென்சி காலத்தைப் பற்றியது என்பதால் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரே தயாரித்திருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

வேட்பு மனு தாக்கல்: அப்படத்துக்கு பின்னர் அரசியலில் பிசியான கங்கனா, தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கனா ரணாவத் களமிறக்கப்பட்டு இருக்கிறார். அங்கு போட்டியிடுவதற்காக கங்கனா ரணாவத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு 90 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கங்கனா தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சொத்து மதிப்பு: அவர் சமர்பித்த பிரமாண பத்திரத்தில் தான் சண்டிகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துளளேன். தன்னிடம் 28 கோடி அசையும் சொத்துக்கள் மற்றும் 62 கோடி அசையா சொத்துக்கள் உள்பட தன்னிடம் 90 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கங்கனா தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். கையில் ரொக்கமாக ரூ.2 லட்சமும், வங்கியில் ரூ.1.35 கோடியும் உள்ளது. மும்பை, பஞ்சாப், மணாலி ஆகிய இடங்களில் கங்கனாவுக்கு சொத்துகள் உள்ளன, மேலும் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், மெர்சிடிஸ் மேபேக் உள்ளிட்ட மூன்று சொகுசு கார்கள் வைத்து இருக்கிறார். இதன் மதிப்பு மட்டும் ரூ. 3.91 கோடி இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X