மெர்சிடஸ் கார் வாங்கிய கங்கனா ரனாவத்... விலையை கேட்டு வாய் பிளந்த ரசிகர்கள் !

மும்பை : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் விலை உயர்ந்த மெர்சிடஸ் காரை வாங்கி உள்ளார். அந்த காரின் விலையை கேட்டு ரசிகர்கள் வாய்பிளந்துள்ளனர்.

இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கங்கனா ரனாவத்.

பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடித்து வரும் இவர், தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத் என்றாலே சர்ச்சை தான். எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வில்லங்கமான கருத்துக்களை பதிவு செய்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் கங்கனா ரனாவத். கடந்த ஆண்டு வன்முறையை தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய ட்வீட்களை நடிகை கங்கனா ரானவத் வெளியிட்டதாக கூறி அவரது ட்விட்டர் கணக்கு, நிரந்தரமாக முடக்கப்பட்டது.

லாக் அப்

லாக் அப்

பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வந்த கங்கனா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக லாக் அப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சி போல இந்த நிகழ்ச்சியிலும் சர்ச்சைக்கு பஞ்சாமே இல்லாமல் மிகவும் சுவாரசியமாக சென்ற இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. இதில், ஸ்டாண்டப் காமெடியன் முனாவர் ஃபரூக் லாக்கப் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆனார். லாக் அப் நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமே கங்கனா தான் என அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

மெர்சிடிஸ் மேபட்ச்

மெர்சிடிஸ் மேபட்ச்

இதையடுத்து, கங்கனா ரனாவத் தகாத் திரைப்படத்தில் நடித்துள்ளார். ரஸ்னீஷ் காய் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட கங்கனா ரனாவத், தான் வாங்கிய புதிய சொகுசு காரை அறிமுகப்படுத்தினார். மெர்சிடிஸ் மேபட்ச் எஸ் 680 (Mercedes Maybach S680) வகை காரான இதன் விலை, 3.6 கோடி ரூபாய். இந்த காரின் விலையை கேட்ட ரசிகர்கள் அப்படியே வாயை பிளந்தனர்.

மெர்சிடிஸ் மேபட்ச் சிறப்பம்சம்

மெர்சிடிஸ் மேபட்ச் சிறப்பம்சம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடஸ் மேபாக் எஸ் கிளாஸ் கார்களுக்கு பெரும் வரவேற்பு குவிந்து வருகிறது. ஏகப்பட்ட பிரபலங்கள் விரும்பி வாங்கும் கார் ரகமாக இந்த கார் மாறியுள்ளார். புதிய ஜெனரேஷன் மெர்சிடஸ் மேபாக் எஸ் கிளாஸ் காரில் 180 மி.மீ. நீண்ட வீல்பேஸ் உள்ளது. காருக்குள் கால்களை நன்கு வசதியாக நீட்டிக் கொள்ளும் அளவுக்கு சொகுசாக உள்ளது. 5.5 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கார் எஸ் ரக மாடல் கார்களில் மிகவும் உன்னதமாக இருக்கிறது. எஸ் 580 மற்றும் எஸ் 680 4மேட்டிக் ஆகிய இரு மாடல்களில் இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. ரனாவத் வாங்கியுள்ள எஸ் 680 மாடல் வரி நீங்கலாக 3.2 கோடி ரூபாய் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X