Kangana Ranaut: பெண்களை பாலியல் பண்டமாக பார்க்கிறார்கள்.. கங்கனா ரனாவத் வேதனை!

மும்பை: பெண்களை பாலியல் பண்டமாகக் கருதி அடித்து துன்புறுத்துவது போன்ற படங்களைத்தான் பெரும்பாலானவர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் அனிமல் படத்தை மறைமுகமாக சாடி உள்ளார். ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்கில் வெளியாகி கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

ரன்பீருடன் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்தார். இப்படத்தில் அதீத வன்முறை காட்சிகள், பெண்கள் இழிவுப்படுத்தும் காட்சிகள் இருந்ததாக படத்திற்கு எதிராக கடும் விமர்சனம் இருந்த போதும், படம் 900 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட விழா நடத்தப்பட்டது.

Bollywood actress kangana ranaut slams ranbir kapoors animal movie

தந்தையின் மேல் அதீத அன்பு வைத்திருக்கும் கதாநாயகன் தந்தையால் நிராகரிக்கப்படுகிறார். ஆனால், அதே தந்தையின் உயிருக்கு ஆபத்து வரும்போது கதாநாயகன் எந்த எல்லை வரை செல்கிறார் என்பதே அனிமல் படத்தின் கதை. டிசம்பர் 1ந் தேதி வெளியான இப்படத்தில் பெண் வெறுப்பை ஊக்குவிக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அனுராக் கஷ்யப், ராம் கோபால் வர்மா போன்ற இயக்குநர்கள் அனிமல் படத்தை ஆதரித்தனர்.

Bollywood actress kangana ranaut slams ranbir kapoors animal movie

வசூலை அள்ளிய அனிமல்: மேலும், அனிமல் படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து, மாநிலங்களவையிலேயே விவாதிக்கப்பட்டது. இப்படி அனிமல் படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வந்த போதும் இத்திரைப்படம் ரூ 900 கோடிக்கும் மேல் வசூலை பெற்று ரன்பீர் கபூரின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படமாக மாறி உள்ளது. இதன் வெற்றிவிழாவில் அனில் கபூரும், உபேந்திர லிமாயே, தயாரிப்பாளர் பூஷன் குமார், நடிகர் பிரேம் சோப்ரா, கரன் ஜோகர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், தமன்னா ஆகியோர் கலந்து கொண்டார்.

Bollywood actress kangana ranaut slams ranbir kapoors animal movie

பெண்கள் பாலியல் பண்டமா: இந்நிலையில் இணையவாசி ஒருவர் கங்கனாவின் தேஜஸ் படத்தைப் பார்த்தேன். படம் நன்றாக இருக்கிறது. கங்கனா நடித்த சிறந்த திரைப்படம் இது. ஆனால் இப்படம் ஏன் சரியாக ஓடவில்லை என்று எனக்கு தெரியவில்லை. கரண் ஜோஹர் மற்றும் சிலர் அவரை அழிக்க நினைக்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தார். அதனை ரீ ட்வீட் செய்து பதிலளித்த கங்கனா, நிறைய பணங்களைச் செலவளித்து என் படங்களுக்கு எதிராக சில வேலை செய்கிறார்கள். நான் கடுமையாகப் போராடி வருகிறேன் . ஆனால் பெரும்பாலான பார்வையாளர்கள் கூட பெண்களை பாலியல் பண்டமாகக் கருதி அடித்து துன்புறுத்துவது போன்ற படங்களைத்தான் ஊக்கப்படுத்துகிறார்கள். அது வேதனையாக இருக்கிறது இதுபோன்ற படங்கள் பெண்கள் முன்னேற்றத்தை பாதிக்கும் என்று நடிகை கங்கனா அனிமல் படத்தை மறைமுகமாக குறை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X