Emergency release date: எமர்ஜென்சி ரிலீஸ் தேதியை அறிவித்த கங்கனா!

சென்னை: 1975ம் ஆண்டு மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் அரசு எமர்ஜென்ஸியை அமல்படுத்தியது. அதனை பின்னணியாக வைத்து எமர்ஜென்ஸி என்ற படத்தை இயக்கியுள்ளார் கங்கனா ரனாவத். ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பீரியட் படமாக உருவாகியுள்ள எமர்ஜென்ஸி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் பெரும்பாலும் இந்தி மொழி படங்களிலேயே நடித்துள்ளார். தமிழிலும் இவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து தாம் தூம் என்ற படத்தில் நடித்தார். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமான தலைவி படத்தில் நடித்திருந்தார்.

Bollywood actress kanganas emergency movie release date

இந்தியில் கேங்ஸ்டர் படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை கங்கனா ரனாவத். குறுகிய காலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கிய கங்கனா, சினிமாவை கடந்து அரசியல் ரீதியாக கருத்துக்களையும் பேசி வரும் கங்கனாவின் கருத்து சில சமயம் பிரச்சனையை கிளப்பி விடும்.

படு தோல்வி: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிப்பில் கடந்தாண்டு வெளியான தக்கட் திரைப்படம் படுதோல்வியடைந்தது. 90 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. அதே போல ராகவா லாரன்சுடன் ஜோடி போட்டு சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் படுதோல்வி அடைந்தது. சந்திரமுகி முதல் பாகம் வசூலை அள்ளிய நிலையில் இரண்டாம் பாகம் வெளியான சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு ஓடி விட்டது.

இந்திரா காந்தியாக கங்கனா: தற்போது கங்கனா ரனாவத், இந்தியில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்ஸி காலகட்டத்தை மையமாக வைத்து வைத்து எமர்ஜென்ஸி உருவாகியுள்ளது. இதில் இந்திரா காந்தி கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். சுமார் 21 மாதங்கள் அமலில் இருந்த எமர்ஜென்ஸி காலக்கட்டத்தில், இந்தியாவில் பல வன்முறைகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தப் படத்தின் டீசரை அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Bollywood actress kanganas emergency movie release date

ரிலீஸ் தேதி: இந்த படத்தில் கங்கனா, இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அதற்காக, இந்திரா காந்தி லுக்கிற்காக மெனக்கெட்டுள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, இப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலில் கறுப்பு பக்கமான எமர்ஜென்ஸி குறித்து இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் தான் இந்தப் படத்தை இயக்கினேன் என கங்கனா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இப்படத்தில் அனுபம் கெர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன், ஷ்ரேயாஸ் தல்படே, விசாக் நாயர் மற்றும் மறைந்த சதீஷ் கௌசிக் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் திரைக்கதை, வசனங்களை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X