தன்னை விட 5 வயது சிறிய நடிகரை திருமணம் செய்யும் பிரபல நடிகை... கல்யாணம் எங்கேன்னு பாருங்க?

மும்பை: பிரபல நடிகை தன்னை விட 5 வயது சிறிய நடிகரை திருமணம் செய்யவுள்ளார்.

பிரட்டிஷ் நேஷனாலிட்டியை கொண்டவர் நடிகை கத்ரினா கைஃப். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

நடிகையாக மட்டுமின்றி மாடலகாவும் வலம் வரும் கத்ரீனா கைஃப் ஏராளமான விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார் கத்ரினா கைஃப்.

பூம் திரைப்படம் மூலம்

பூம் திரைப்படம் மூலம்

நடிகை கத்ரினா கைப் ஹாங்காங்கில் பிறந்தவர். அவருக்கு 5 சகோதரிகள் உள்ளனர். அவருடைய தாயார் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ஆவார், தந்தை காஷ்மீரை சேர்ந்தவர். அவர் 'பூம்' திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானார்.

சல்மான் கானுடன் காதல்

சல்மான் கானுடன் காதல்

நடிகை கத்ரினா கைஃப் அடிக்கடி காதல் கிசுகிசுக்களிலும் சிக்கியுள்ளார். சல்மான் கானுடன் டேட்டிங்கில் இருந்தார் கத்ரினா. பின்னர் அவர்களின் ரிலேஷன்ஷிப் சில காரணங்களால் முறிந்தது.

5 வயது சிறய நடிகர்

5 வயது சிறய நடிகர்

இதனை தொடர்ந்து பிரபல நடிகரான ரன்பீர் கபூருடன் கத்ரினா கைஃப் நெருக்கமாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் நடிகை கத்ரினா கைஃப் தன்னை விட 5 வயது சிறியவரான நடிகர் விக்கி கவுஷலுடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் பரவியது.

வரும் டிசம்பரில் திருமணம்

வரும் டிசம்பரில் திருமணம்

ஆனால் அதுகுறித்து இருவரும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில், நடிகை கத்ரினா கைஃப்புக்கும் நடிகர் விக்கி கவுஷலுக்கும் வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இப்போதும் அவர்கள் இருவரும் தங்களின் திருமணம் குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

பிரபலங்கள் பங்கேற்பு

பிரபலங்கள் பங்கேற்பு

இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் போர்ட் ஹோட்டலில் வரும் டிசம்பர் மாதம் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பிரபல நடிகர்கள் சித்தார்த் மல்கோத்ரா, கரண் ஜோஹர், கியாரா அத்வானி உட்பட பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

மூன்று நாட்கள் திருமணம்

மூன்று நாட்கள் திருமணம்

இதனை தொடர்ந்து கத்ரினா கைஃப்பின் மற்றும் விக்கி கவுஷலின் மேலாளர்கள் திருமணத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஹோட்டல்களில் அறைகள் மற்றும் கார்கள் போன்றவற்றை இப்போதிருந்தே முன்பதிவு செய்து வருகின்றனர். டிசம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நாட்கள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

சல்மான் கான் கலந்து கொள்ளவில்லை

சல்மான் கான் கலந்து கொள்ளவில்லை

இதனிடையே கத்ரினா கைஃப்பின் திருமணத்தில் நடிகர் சல்மான் கான் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் தற்போது டைகர்-3 படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் இவர்களது திருமணத்தில் கலந்துகொள்ள முடியாது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது குடும்பத்தினர் திருமணத்தில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X