பெண்ணாக இருந்ததால்..சினிமாவில் நான் பட்ட அவமானம்.. பிரபல நடிகை வேதனை!

சென்னை: சினிமாவில் வெற்றி பெற அழகும், திறமையும் இருந்தால் போதாது கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று பலர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படி அழகும் திறமையும் இருந்தும் தனக்கான இடத்தை பிடிக்க போராடியது குறித்தும், பட்ட அவமானம் குறித்தும் பிரபல நடிகை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

பாலிவுட் கனவுக்கனி காத்ரினா கைஃப், ரேஸ், சிங் இஸ் கிங், பாடிகார்ட், அக்னிபாத், ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராகவலம் வந்து கொண்டிருக்கும் கத்ரீனா பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

Bollywood actress Katrina Kaif has spoken about the humiliation she faced in the film industry

கத்ரினாவும் விக்கி கௌஷலும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் கோலாகலமான ஜெய்பூர் சவாய் மாதோபூரில் உள்ள சிக்ஸ் சென்ஸ் சொகுசு ஹோட்டலில் திருமணம் நடந்து முடிந்தது. பாலிவுட்டில் அறிமுகமாகி சில ஆண்டுகளே ஆன விக்கி கௌஷலை கத்ரினா யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை கத்ரீனா கைப்: அண்மையில் இவர், ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்ட ஜனவரி 12ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில், ராதிகா ஆப்தே, அஷ்வினி கலாசேகர், சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன் மற்றும் ஹிந்தியில் டின்னு ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

பல விமர்சனங்கள்: இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கத்ரீனா கைப், திரையுலகில் தனது வெற்றிப் பயணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், என் நடனம் பற்றி கடுமையான பல விமர்சனங்களை எதிர்கொண்டேன், தான் ஒரு நடிகையாக மாற வாய்ப்பில்லை என்று பலர் என்னிடம் நேரடியாகவே கூறியதாக கத்ரீனா தெரிவித்துள்ளார்.

முகத்திற்கு நேராக: மேலும், நான் நடிகர் வெங்கடேசுடன் மல்லீஸ்வரி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, படப்பிடிப்பில் நடந்த ஒரு நிகழ்வு எனக்கு நினைவிருக்கிறது. செட்டில் ஒருவர், இந்த பெண்ணால் நடனமாட முடியாது என்று மைக்கில் கூறிக் கொண்டே இருந்தார். நான் அதை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இருப்பினும், அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் முகத்துக்கு நேராக பலர் நிறைய கருத்துக்கள் கூறியிருக்கிறார்கள். உன்னால் இதை செய்ய முடியாது, உன்னால் வெற்றிபெற முடியாது, என பலர் கூறியிருக்கின்றனர். ஆனால், அவை அனைத்தும் மாறிவிட்டது.

இதுபோன்று, கூறிய அந்த நபர்கள் அனைவருடனும் நான் பணியாற்றினேன். அவர்கள் அனைவருடனும் படங்களில் நடித்தேன். அவர்கள் கூறியதை நான் இதயத்திற்கு எடுத்துச் சென்ற , மனச்சோர்வடைந்து கைவிட்டிருந்தால், இது எதுவும் நடந்திருக்காது. இதுபோன்ற கருத்துக்கள் ஒருபோதும் என்னை ஆழமாக பாதிக்க நான் விடவில்லை என்று அந்த பேட்டியில் கத்ரீனா கைப் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X