Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
திருமணமாகி 6 மாசம் தானே ஆச்சு.. அதுக்குள்ள கத்ரீனா கைஃப் கர்ப்பமா ? கணவர் கொடுத்த விளக்கம்!
மும்பை : பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கத்ரினா கைஃப் கர்ப்பமா இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் கத்ரீனா கைஃப் ஒருவர்.
அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெரப் என பல முன்னணி நடிகர்கள் நடித்த பூம் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த இவர், தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சிப்புயலாக உலா வருகிறார்.
இந்தி
திணிப்புக்கு
எதிராக
தில்லாக
பேசிய
ஏ.ஆர்.ரஹ்மான்…மீண்டும்
சரியான
பதிலடி!

கத்ரினா கைஃப்
கத்ரினாவும் விக்கி கௌஷலும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவருக்கும் கோலாகலமான திருமணம் நடந்து முடிந்தது. பாலிவுட்டில் அறிமுகமாகி சில ஆண்டுகளே ஆன விக்கி கௌஷலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் கத்ரீனா.

கத்ரினா, விக்கி கௌஷல்
இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் எந்த கிசுகிசு போல கூட எங்கேயும் வெளியாகவில்லை. ஒன்றாக இருக்கும் புகைப்படமோ, செய்தியோ எதுவுமே வெளிவரவில்லை. அதேபோல இவர்கள் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று செய்தி வெளிவந்த போது அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அது மட்டுமின்றி, திருமண விஷயத்தையும் மிகவும் பிரைவேட்டாக வைத்திருந்தனர்.

கோலாகலமாக நடந்த திருமணம்
ஜெய்பூர் சவாய் மாதோபூரில் உள்ள சிக்ஸ் சென்ஸ் சொகுசு ஹோட்டலில் மிகவும் கோலாகலமாக நடந்த இவர்களின் திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணத்தால் ஜெய்பூரே திணறியது என்று சொல்லும் அளவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

கத்ரினா கைஃப் கர்ப்பமா?
இந்நிலையில் கத்ரினா கைஃப் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கத்ரினா கைஃபின் கணவர் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில், குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இப்போதைக்கு இல்லை, நாங்கள் இருவரும் படங்களில் நடிப்பதையும், கதை தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
எங்களது திருமண வாழ்க்கையை தற்போது சந்தோஷமாக சென்று கொண்டு இருக்கிறது. தயவு செய்த வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்கி கெளசல். நடிகர் கத்ரினா கைஃப் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கிரைம் திரில்லராக உருவாகிவரும் இத்திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.