இந்த பயணம் கடினமானது... கேன்சர் தினத்தில் அனுபவங்களை பகிர்ந்த மனிஷா கொய்ராலா!
மும்பை : தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சில படங்களை நடிகை மனிஷா கொய்ராலா பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ், இந்தி என பல மொழித்திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பாம்பே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.
இதை தொடர்ந்து உயிரே, இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர். இதையடுத்து வெளியான பாபா, ஆளவந்தான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

கர்ப்பப்பை புற்று நோய்
கடந்த 2012 ம் ஆண்டு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா அமெரிக்காவில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் புற்றுநோய் மையத்தில் 1 வருட காலம் சிகிச்சை எடுத்துக்கொண்டு புற்றுநோயில் இருந்து குணம் அடைந்தார்.

சுயசரிதை
புற்றுநோயில் இருந்து குணமடைந்த அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டது குறித்து, தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்தும், தனது சுயசரிதையான ஹீல்ட்: ஹவ் கேன்சர் கிவ் மீ எ நியூ லைஃப் என்ற புத்தகத்தை எழுதினார்.

கடினமான பயணம்
இந்நிலையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தான் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்களை நடிகை மனிஷா கொய்ராலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர், இந்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில், புற்றுநோய் சிகிச்சையின் இந்த கடினமான பயணத்தை கடந்து செல்லும் அனைவருக்கும், நிறைய அன்பு மற்றும் வெற்றியை நான் விரும்புகிறேன்.

பிரார்த்தனை செய்கிறேன்
பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர். அதற்கு அடிபணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன். நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் மேலும் பரப்ப வேண்டும். நோயாளிகளுக்கு நம்பிக்கை நிறைந்த அனைத்து கதைகளையும் சொல்ல வேண்டும், மீண்டும் சொல்ல வேண்டும். நமக்கும் உலகத்துக்கும் கருணை காட்டுவோம். அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். நன்றி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











