சரக்கு அடிக்க விடல.. கொடுமை படுத்தினான்.. முதல் கணவரை விவாகரத்து செய்ய காரணம்.. பாலிவுட் நடிகை கண்ணீர்

மும்பை: சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து கொண்டால் பலரது கவனமும் அந்த விவாகரத்தின் மீது விழுந்து விடுகிறது. அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என ரசிகர்களும் இணையவாசிகளும் கங்கணம் கட்டிக் கொண்டு இணையத்தில் குதித்து விடுகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகை நீலம் கோத்தாரி தனது முதல் கணவரை விவாகரத்து செய்ய என்ன காரணம் எனத் தெரிவித்துள்ளார். அது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Neelam Kothari Bollywood Neelam Kothari Cry

நடிகை நீலம் கோத்தாரி, பாலிவுட் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் தனது முதல் கணவரை பிரிந்து தற்போது தனது இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். முதல் கணவரைப் பிரிந்த பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சமீர் சோனியை மறுமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2013ஆம் ஆண்டு, அஹானா என்ற மகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

Neelam Kothari Bollywood Neelam Kothari Cry

விவாகரத்து: ஒரு மகிழ்ச்சியான குடும்பமாக இருந்த இவர்கள் வாழ்க்கையில், மகள் அஹானா ஒரு நாள் மாலையில் கேட்ட கேள்வி, நீலம் கோத்தாரியை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதாவது, தனது தோழிகளுடன் சேர்ந்து, தனது தாய் குறித்து, கூகுள் செய்து பார்த்துள்ளனர். அப்போது அவருக்கு முதல் திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆனது தொடர்பான தகவல்களைப் பார்த்துள்ளார். இதனைப் பார்த்த அஹானா, அம்மா, நீங்கள் முதல் திருமணம் செய்து கொண்டு, விவாகரத்து செய்து கொண்டீர்களா? எனக் கேள்வி கேட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத நீலம் கோத்தாரி, அதிர்ச்சியுடன் மகளைப் பார்த்து எப்படித் தெரிந்து கொண்டாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு மகள், அஹானா, நீங்கள் பிரபலம், கூகுள் செய்து பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறியுள்ளார்.

Neelam Kothari Bollywood Neelam Kothari Cry

நீலம் கோத்தாரி: இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய நீலம் கோத்தாரி தனது முதல் திருமணம் குறித்து, ஏன் விவாகரத்து செய்தார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது, மனம் உடைந்து அழுதும் உள்ளார். அதாவது, நீலம் கோத்தாரி முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த, தொழில் அதிபரின் மகன் ரிஷி சேத்தியாவைத் திருமணம் செய்துகொண்டார். அவரது திருமண வாழ்க்கை குறித்து பேசுகையில், " நான் திருமணத்திற்கு இங்கிலாந்திற்குச் செல்லவேண்டி இருந்தது. அங்கேயே தங்கினேன். எனது முன்னாள் கணவர் என்னை, இந்திய உடைகளைத்தான் அணிய வேண்டும், மாடர்ன் உடைகளை அணியக் கூடாது எனக் கூறினார். அவர் கூறியதை பின்பற்றினேன்.

Neelam Kothari Bollywood Neelam Kothari Cry

சரக்கு அடிக்க விடல: ஒரு கட்டத்தில் அசைவம் சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது எனக் கூறினார். நானும் அவர் கூறியதைக் கேட்டு, மது அருந்தாமல், அசைவம் சாப்பிடாமல் இருந்தேன். இதையடுத்து அவர் எனது பெயரை மாற்றி வைத்துக்கச் சொன்னார். எனவே நான் எனது பெயரையும் மாற்றி வைத்துக் கொண்டேன். வெளியில் போகும்போது மக்கள் என்னிடம் வந்து நீங்கள் நீலம் கோத்தாரி தான் எனக் கேட்டால், நான் இல்லை எனக் கூறி விடுவேன். எனது அடையாளத்தை நான் மாற்றி விட்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் நான் இது தொடர்பாக என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். அதனால்தான் விவாகரத்து செய்துவிட்டேன்" என கண்ணீருடன் பேசியுள்ளார். அவரது இந்தக் கதையைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

Neelam Kothari Bollywood Neelam Kothari Cry

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X