காதலர் தினத்தில் திருமண முறிவு...அதிரடி முடிவெடுத்த பாலிவுட் பிரபலம்

மும்பை : திரையுலகில் அடுத்தடுத்து நட்சத்திர ஜோடிகள் தொடர்ந்து விவாகரத்து முடிவு எடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகை ராக்கி சாவந்த்.

காதலர் தினத்தில் தனது திருமண முறிவு குறித்து அவர் தற்போது அறிவித்துள்ளார்.

அதிகரிக்கும் திருமண முறிவு

அதிகரிக்கும் திருமண முறிவு

சமீப காலங்களாக திரையுலகின் பிரபல ஜோடிகள் அடுத்தடுத்து தங்களது திருமண முறிவு குறித்த அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றனர். சமீபத்தில் இந்த பயணத்தை துவக்கி வைத்த புண்ணியம் என்னவோ சமந்தா மற்றும் நாக சைத்தன்யாவிற்கு சேர்ந்துள்ளது.

சமந்தா -நாக சைத்தன்யா பிரிவு

சமந்தா -நாக சைத்தன்யா பிரிவு

அவர்கள் தங்களது விவாகரத்தை கடந்த ஆண்டில் வெளியிட்டனர். இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். தொடர்ந்து அவர்கள் இருவர்மீதும் குறிப்பாக சமந்தாமீது பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதையெல்லாம் அவர் கோபத்துடன் எதிர்கொண்டார்.

தனுஷ் -ஐஸ்வர்யா பிரிவு

தனுஷ் -ஐஸ்வர்யா பிரிவு

இதையடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் பிரிவு முடிவை எடுத்துள்ளனர். 18 ஆண்டுகாலம் நீடித்த இவர்களது உறவு தற்போது பிரிவு முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ அவர்களை சேர்ந்தவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

ராக்கி -ரிதேஷ் திருமண முறிவு

ராக்கி -ரிதேஷ் திருமண முறிவு

தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். இவர் இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்க்ததில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிலும் காதலர் தினத்தில் இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சை நடிகை

சர்ச்சை நடிகை

பாலிவுட்டில் பிரபல நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் ராக்கி சாவந்த். மேலும் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் மட்டுமின்றி கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். தமிழிலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

எப்போதும் சர்ச்சைக்கு பெயர் போனவர் ராக்கி சாவந்த், இவர் ரிதேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பிறகும் பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இதையடுத்து ராக்கி மற்றும் ரிதேஷ் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விவாகரத்து முடிவு

விவாகரத்து முடிவு

இதையடுத்தே தற்போது விவாகரத்து முடிவை ராக்கி எடுத்துள்ளதாக கூறியுள்ளார். தங்களுக்கிடையில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் அதை தீர்த்துக் கொள்ள தாங்கள் எடுத்த முயற்சிகள் பலனை கொடுக்கவில்லை என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரிவு முடிவு

பிரிவு முடிவு

இதையடுத்து தற்போது பிரியும் முடிவை எடுத்துள்ளதாகவும், இருவரும் தங்களது வாழ்க்கையை அவரவர் பாதையில் என்ஜாய் செய்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் ரசிகர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் என்னக் காரணம் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X