ஐஸ்வர்யா ராய் குறித்து கேலி பேச்சு … சரியான பதிலடி கொடுத்த கேஜிஎஃப் 2 நடிகை!

மும்பை : பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் 'கேஜிஎஃப் 2' படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த மாதம் தமிழ்,கன்னடம், தெலுங்கு,மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி மக்களிடம் பெரும் பாராட்டை பெற்றது.

யாஷின் அதிரடியான நடிப்பு, கதைக்களம் என எதையும் ஒரு குறைகூட கூறமுடியாத அளவுக்கு படம் பட்டையை கிளப்பி இருந்தது.

ரவீனா டாண்டன்

ரவீனா டாண்டன்

கே.ஜி.எஃப் 2 படத்தில் ரமிகா சென் கதாபாத்திரத்தில் ரவீனா டாண்டன் நடித்திருந்தார். இவரின் கதாபாத்திரமும், துணிச்சலான நடிப்பும் அனைவரையும் வியக்கவைத்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ரவீனா, கலகலப்பாக பல விஷயங்களுக்கு சுவாரசியமாக பதிலளித்தார்.

ஐஸ்வர்யாவை கேலி செய்தனர்

ஐஸ்வர்யாவை கேலி செய்தனர்

அப்போது, ரவீனாவிடம் ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவாக பேசியது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன, அதற்கு பதிலளித்த ரவீனா, ஐஸ்வர்யா ராய் 2011ம் ஆண்டு தனது மகள் ஆராத்யா பச்சனைப் பெற்றெடுத்தார். அந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராய் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதனால் அவரை பல ஊடகங்கள் கேலியாக பேசத்தொடங்கின.

என்னையும் கேலி செய்தார்கள்

என்னையும் கேலி செய்தார்கள்

அப்போது தான், நான் ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவாக பேசினேன். ஏன் என்றால், எனக்கு குழந்தை பிறந்த போது, உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக இருந்தேன். அப்போது ஒரு பத்திரிகையாளர் என் உடல் எடை குறித்து என்னை கேலி செய்தார்கள். அதே போன்றுதான் ஐஸ்வர்யா ராயைக் கேலி செய்தார்கள். அதனால்தான் நான் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன் என்றார்.

சரியான பதிலடி

சரியான பதிலடி

மேலும், ஒரு பத்திரிகையாளர் என்னிடம், 'ரவீனா ஜி உங்கள் உடல் எடை அதிகரித்துவிட்டது. பின் எப்படி நடிக்கப் போகிறீர்கள். ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து கலந்துகொள்வீர்களா? என்று கேட்டார். அப்போது நான் அந்த பத்திரிக்கையாளரிடம் சொன்னேன் என் உடல் எடை குறைந்துவிடும், அதன் பின் உங்கள் முகங்களை எங்கே போய் வைத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டதாக ரவீனா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X