பிகினியில் டக்கரா போஸ் கொடுத்த சாரா அலி கான்...திணரும் இணையம் !
மும்பை : சாரா அலிகான் பிகினியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை திணறடித்து வருகின்றன.
சைப் அலிகானின் மகளான சாரா அலிகான் தந்தையைப் போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டு இப்போது பல படங்களில் நடித்துக் அந்த ஆசையை நிறைவெற்றி வருகிறார்.
ரன்வீர் சிங்குடன் இவர் நடித்து வெளியான சிம்பா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இப்போது தன்னுடைய நடிப்பு திறமையால் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

சாரா அலிகான்
சாரா அலிகான் பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தின் வாரிசு. இவர் நடிகர்கள் அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரின் மகளாவார். இந்தி நடிகர் சைஃயிப் அலிகானின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்ரிதா சிங் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சைஃப் அலி கான், அமிர்தா சிங்கை விவகாரத்து செய்து விட்டு, கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தனது அம்மா அமிர்தா சிங்கும் ஒரு நடிகை அப்பாவும் ஒரு நடிகர் எனவே தானும் ஒரு நடிகையாக வேண்டுமென்ற ஆசையும் இருந்து வந்துள்ளது சாரா அலி கானுக்கு .

பிரச்சனை
இதையடுத்து, கேதார்நாத் என்ற படத்தில் முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். சுசாந்த் சிங் ராஜ்புட்டுடன் இணைந்து நடித்த முதல் படத்திலேயே கலக்கி இருப்பார் சாரா அலிகான். இந்த படம் சில பல பிரச்சினை காரணமாக வெளியாவது சற்று தாமதமானது. படம் தாமதமாக வந்தாலும், இந்த படத்தை பார்த்த அனைவரும் சாரா அலி கானையும் அவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டினர்.

லவ் ஆஜ் கல்
முதல் பட வெற்றியைத் தொடர்ந்து சாரா, ரன்வீர் சிங்குடன் சிம்பா என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வந்த நிலையில் சாராவிற்கு அடுத்தடுத்த படங்கள் குவிய தொடங்கியது. அந்த வெற்றியை தொடர்ந்து கார்த்திக் ஆர்யானுடன் லவ் ஆஜ் கல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

நகைச்சுவை படம்
இப்படி வெற்றிகளைக்கண்ட சாரா அலி கான் தனது வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வருகிறார். இவர் இப்பொழுது வருண் தவானுடன் ஜோடி சேர்ந்து "கூலி நம்பர் ஒன்" என்ற காமெடி படத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

தனுஷூடன் ஜோடி
இவர் நடிகர் அக்சய் குமார் மற்றும் தனுஷ் உடன் இணைந்து 'அத்ரங்கி ரே' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இது நடிகர் தனுசுக்கு மூன்றாவது ஹிந்தி படம் ஆகும். இந்த படத்தில் சாரா அலிகான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் தனுஷ் மதுரையைச் சேர்ந்த இளைஞராக நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
Recommended Video

இணையத்தில் ஆக்டிவாக
நடிகை சாரா அலிகான் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இவர் தனது அழகான புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டே இருக்கிறார். அவரை அதிக அளவில் ரசிகர்களைப் பின்தொடர்கிறார் மற்றும் அவரது படங்கள் பகிரப்பட்டவுடன் வைரலாகின்றன.

ஹாட்பிகினி
தற்போது ஹாட்பிகினியில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தை திணறடித்து வைரலாகி வருகின்றன. அதே வேளையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன. இருப்பினும் பாலிவுட்டில் பலர் ஓவர் கிளாமர் வேண்டாம் என்று அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த அம்மணி அதை காதில் வாங்குவது போல தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











