கூட்டத்தில் சிக்கிய பாலிவுட் நடிகை.. கண்ட இடத்தில் தொட்டு அத்துமீறிய ரசிகர்கள்!

சென்னை: பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்காக லக்னோவிற்கு சென்றிருந்தார். அவர் அங்கு வந்ததை தெரிந்து கொண்ட அவரின் ரசிகர்கள், அவர் வெளியே வந்ததும், முட்டி மோதி ஓடிவந்து, அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றனர். சிலர் ஆண் ரசிகர்கள் அந்த நேரத்தில் அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்: ஷ்ரத்தா ஒரு எளிய பச்சை நிற மேலாடை மற்றும் ஜீன்ஸ் அணிந்து ஹோட்டலில் இருந்து வெளியே வந்தார். அவர் அங்கு வந்து இருப்பதை தெரிந்து கொண்ட ரசிகர் கூட்டம், ஓடி வந்து அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது அவர் ஒரு பெண் ரசிகையின் கையை பிடித்து கட்டி அணைத்தார். இதைப்பார்த்துக்கொண்டிருந்த பெரும் கூட்டம் ஒன்று நடிகை ஷ்ரத்தாவை நோக்கி ஓடிவந்தனர். இதனால், நடிகை நிற்க கூட முடியாமல் தள்ளாடினார். அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போதும், ரசிகர்கள் முட்டி மோதினர். சில ஆண் ரசிகர்கள் அந்த நேரத்தில் நடிகை ஷ்ரத்தா கபூரை தவறாக தொட்டனர்.

Shraddha Kapoor Bollywood

அத்து மீறிய ரசிகர்கள்: இதையடுத்து அருகில் இருந்த பவுன்சர்கள் அவரை கூட்டத்திலிருந்து விலக்கி காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. கூட்டத்தில் ரசிகர்கள் வரம்பு மீறி நடந்து கொண்ட போதும், ஷ்ரத்தா கபூர் யாரிடமும் கடுமையான முகத்தை காட்டாமல், கனிவாக அன்பாக நடந்து கொண்டதற்கு அவரது ரசிகர்கள் இணையத்தின் வழியாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். எனினும், இதுபோன்ற நேரத்தை பயன்படுத்தி அத்துமீறும் ரசிகர்களை திட்டி வருகின்றனர்.

ஸ்ட்ரீ 2: நடிகை ஷ்ரத்தா கபூர் தற்போது, ஸ்ட்ரீ 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில், ராஜ்குமார் ராவ், அபர்சக்தி குரானா மற்றும் பங்கஜ் திரிபாதி ஆகியோருடன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, தமன்னா பாட்டியா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகை ஷ்ரத்தா கபூர்: நடிகர் சக்தி கபூரின் மகளான, ஷ்ரத்தா கபூர், 2010 ஆம் ஆண்டு டீன் பட்டி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து, லவ் கா தி எண்ட் லீட் ரோலில் நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றத்தை தொடர்ந்து, ஆஷிகி 2 படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்த படத்தைத் தொடர்ந்து நடிகை ஷ்ர்த்தா கபூர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X