பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளிய நடிகை ஷ்ரத்தா கபூர்.. ஒத்த படத்துல மொத்தமும் மாறிபோச்சு!

மும்பை: பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் ஸ்ட்ரீ 2. இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஸ்ட்ரீ படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன பாலிவுட் படங்களில் அதிக வசூலைக் குவித்து பாக்ஸ் ஆஃபீஸ் வின்னராக இந்தப் படம் மாறியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி மூலம், இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் நடிகை ஷ்ரத்தா கபூர். அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது நடிகை ஷ்ரத்தா கபூரை 91.5 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை விட கொஞ்சம் அதிகம். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இந்தியாவில் உள்ள பிரபலங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்களைக் கொண்டவர்கள் என்றால் அதில் விராட் கோலியின் பெயரும் பிரியங்கா சோப்ராவின் பெயரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றது. இது மட்டும் இல்லாமல் இந்த வரிசையில் பிரதமர் மோடி மூன்றாவது இடத்தில் இருந்தார். தற்போது பிரதமர் மோடியை விடவும் அதிக ஃபாலோவர்ஸ்களை நடிகை ஷ்ரத்தா கபூர் எட்டியுள்ளார்.

Shraddha Kapoor PM Modi Street 2

இந்தியாவில் உள்ளவர்களிலேயே விராட் கோலி அதிக ஃபாலோவர்ஸ்களைக் கொண்டுள்ளார். அதாவது அவரை மட்டும் இன்ஸ்டாகிராமில் 271 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவருக்கு அடுத்த இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 91.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதுவரை இவருக்கு அடுத்த இடத்தில் பிரதமர் மோடி 91.3 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுடன் இருந்தார். தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி நடிகை ஷ்ரத்தா கபூர் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளார்.

ஸ்ட்ரீ 2 வெற்றி: ஸ்ட்ரீ 2 படத்தின் வெற்றிக்குப் பின்னர் இவரது ஃபளோவர்ஸ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இவரை தற்போது 91.5 மில்லியன் ஃபளோவர்ஸ்கள் பின் தொடருகின்றனர். இதனால் பிரதமர் மோடியை விடவும் அதிகமானோர் பின் தொடருகின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் நடிகைகள் ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முறையே 85.1 மில்லியன் மற்றும் 79.8 மில்லியன் ஃபாளோவர்ஸ்களைக் கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி: ஆனால் பிரதமர் மோடியை எக்ஸ் பக்கத்தில்101.2 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன் உலகளவில் அதிகம் ஃபாலோவர்களைக் கொண்ட தலைவராக இருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது மற்றும் போப் பிரான்சிஸ் போன்றவர்களை விட அவர் கணிசமான அளவில் அதிக ஃபாலோவர்ஸ்களைக் கொண்டுள்ளார். இதற்கிடையில், ஷ்ரத்தாவின் 'ஸ்ட்ரீ 2' திரைப்படம், திரையரங்குகளில் ஆறாவது நாளில், இந்தியாவில் ரூபாய். ரூபாய் 250 கோடிகளைத் தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வசூல்: இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் முதல் நாளில் ரூபாய் 51.8 கோடியை வசூல் செய்தது, அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் ரூபாய் 31.4 கோடியும், மூன்றாவது நாளில் ரூபாய் 43.85 கோடியும், நான்காவது நாளில் ரூபாய் 55.9 கோடியும், ஐந்தாவது நாளில் ரூபாய் 38.1 கோடியும் வசூலித்துள்ளது. ஆறாவது நாளில், திரைப்படம் ரூபாய் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இதன் மூலம் மொத்த இந்தப் படம் இந்தியாவில் மட்டும் ரூபாய் 254.55 கோடிகளை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. படத்தின் வசூலே படக்குழுவுக்கும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷ்ரத்தா கபூருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. மேலும் பிரதமர் மோடியை விடவும் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளதால், இது குறித்த பேச்சும் பாலிவுட் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X