ரஜினி பட நடிகைக்கு இன்று திருமணம்.. திருமணத்திற்காக சோனாக்ஷி மதம் மாறவில்லை.. ஜாகீர் தந்தை விளக்கம்!

புதுடெல்லி: நடிகை சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் தமிழிலும் லிங்கா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமான மாறினார். ஏழு ஆண்டுகளாக ஜாகீர் இக்பாலும் சோனாக்ஷியும் காதலித்து வந்த நிலையில் இன்று அவர்களுக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்தை பார்க்க ஒட்டுமொத்த பாலிவுட்டும் தயாராக உள்ளது.

சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் 2022 ஆம் ஆண்டு டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தின் சேர்ந்து நடித்தபோது காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. படவிழாக்கள், பொது நிகழ்வுகளில் இருவரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்டனர்.

sonakshi Sinha Zaheer Iqbal Wedding

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது நடிகையின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான சத்ருகன் சின்ஹா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இதையடுத்து, குடும்பத்தில் பல பிரச்சனைகள் சந்தித்து தற்போது இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.

சோனாக்ஷி சின்ஹா திருமணம்: சோனாக்ஷி சின்ஹா-ஜாஹீர் இக்பால் திருமணத்தை முன்னிட்டு, நேற்று இரவு சோனாக்ஷியின் மும்பை இல்லமான ராமாயணத்தில் பூஜை நடத்தப்பட்டது. மணமகள் சோனாக்ஷி தனது அம்மா பூனம் சின்ஹாவுடன் பூஜையில் இருந்தார். அந்த பூஜையில் சோனாக்ஷி சின்ஹா ​​எப்போதும் போல் பண்டிகை கால நீல நிற உடையில் அழகாக காணப்பட்டார். இதில். சோனாக்ஷியின் சிறந்த தோழியும் அவரது டபுள் எக்ஸ்எல் இணைந்து நடித்த ஹுமா குரேஷியும் விழாக்களில் கலந்து கொண்டார். அவருடன் அவர் சகோதரர் சாகிப் சலீமும் வந்திருந்தார்.

sonakshi Sinha Zaheer Iqbal Wedding

ஹல்தி: முன்னதாக 20ந் தேதி ஹல்தி நடைபெற்றது. அதில், மணமகள் சோனாக்ஷி சின்ஹா மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்து இருந்தார். எளிமையாக நடைபெற்ற இந்த ஹல்தி நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இன்று திருமணம்: இந்நிலையில் இன்று மாலை சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு வெள்ளை நிற ஆடையை தேர்வு செய்து உள்ளார். இந்த ஆடையை மாப்பிள்ளை வீட்டார் சார்பாக மணகளுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த உடையில் சோனாக்ஷியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மதம் மாறவில்லை: மேலும், சோனாக்ஷி இஸ்லாம் மதத்திற்கு மாறிதான் ஜாகீர் இக்பால் செய்து கொள்வதாக பரவிய வதந்தி குறித்து பேசிய ஜாஹீரின் தந்தை, "அவர் மதம் மாறவில்லை, அது நிச்சயம் நடக்காது. அவர்களுடையது இதயங்களின் ஒன்றான பின் மதத்திற்கு எந்தப் பங்கும் இல்லை.நான் மனிதநேயத்தை நம்புகிறேன். இந்துக்களால் கடவுளை பகவான் என்றும் அழைக்கிறார்கள் முஸ்லிம்கள் அல்லா என்றும் அழைக்கிறார்கள். ஆனால் நாளின் முடிவில் நாம் அனைவரும் மனிதர்கள். எனது ஆசீர்வாதங்கள் ஜாகிர் மற்றும் சோனாக்ஷிக்கு நிச்சயம் உண்டு என்று கூறியுள்ளார்.

சல்மான் கானுடன்: நடிகை சோனாக்ஷி சின்ஹா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீரமாண்டி படத்தில் நடித்திருந்தார. ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் சாகிப் சலீம் ஆகியோருடன் இணைந்து ஹாரர் காமெடி காகுடாவில் நடிக்கிறார். ககுடா திரைப்படம் ஜூலை 12 அன்று ZEE5 இல் திரையிடப்பட உள்ளது. சோனாக்ஷி சின்ஹா ​​சல்மான் கானுக்கு ஜோடியாக 2010 ஆம் ஆண்டு வெளியான தபாங் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் பெரிய அளவில் அறிமுகமானார். தபாங் படத்தின் மற்ற இரண்டு பாகங்களிலும் சல்மான் கானுடன் நடித்திருந்தார் சோனாஷி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X