ரூ.37 லட்சம் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டார்… பிரபல நடிகைக்கு எதிராக பிடிவாரண்டா ?
மும்பை : பிரபல பாலிவுட் நடிகைக்கு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த பிரமோத் சர்மா என்பவர் 2019ம் ஆண்டு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வைக்க முன்பணமாக ரூ.37 லட்சம் கொடுத்திருந்தார்.
ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார் என குற்றம்சாட்டினார்.

ஏமாற்றிவிட்டார்
பிரமோத் சர்மா தான் கொடுத்த ரூ.37 லட்சத்தை திரும்ப கொடுக்கும்படி சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்டார். ஆனால் அந்த பணத்தையும் சோனாக்ஷி சின்ஹா கொடுக்க மறுத்துவிட்டார் என சொல்லப்படுகிறது. இதனால் சர்மா மொரதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் சோனாக்ஷி சின்ஹா மீது மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பிடிவாரண்ட்
இந்நிலையில், நடிகை சோனாஷிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ள சோனாஷி சின்ஹா, எனக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

ஊடகங்கள் விசாரிக்காமல்
இந்த செய்தியை ஊடங்கள் சரிவர விசாரிக்காமல் வெளியிட்டுள்ளனர். இது போன்ற செய்திகள் வரும் போது சம்மந்தப்பட்டவரிடம் விசாரித்துவிட்டு ஊடகங்கள் செய்தியை வெளியிட வேண்டும். இது முற்றிலும் புனையப்பட்ட கதை. இந்த விவகாரத்தில் தனது வழக்கறிஞர் குழு சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது போன்ற வதந்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. பல ஆண்டுகளாக நான் பொறுமையை கடைபிடித்து வருகிறேன்.

நற்பெயரை கெடுக்க
என் நற்பெயரை கெடுக்கவும், என்னிடம் விளம்பரத்தைப் பெறவும், என்னிடம் பணம் பறிக்கவும் அந்த நபர் முயற்சிக்கிறார். இந்த வழக்கு முராதாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முராதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை இந்த விஷயத்தில் எனது கருத்து இதுதான், எனவே தயவுசெய்து என்னை அணுக வேண்டாம். நான் வீட்டில் இருக்கிறேன், எனக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











