திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. இணையத்தில் கிளம்பிய வதந்தி.. கடும் கோபத்தில் ரஜினி பட நடிகை!

சென்னை: பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹாவிற்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் தனது நீண்ட நாள் காதலர் ஜாகீர் இக்பாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து மாதம் தான் ஆகி உள்ளது. அதற்குள் சோனாக்ஷி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், திருமணத்திற்கு முன்பே அவர் கர்ப்பமாகி விட்டதாகவும் இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா, நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். இவர், தமிழில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார். இவர், ​​சல்மான் கானுக்கு ஜோடியாக 2010 ஆம் ஆண்டு வெளியான தபாங் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, தபாங் படத்தின் மற்ற இரண்டு பாகங்களிலும் சல்மான் கானுடன் நடித்திருந்தார்.

sonakshi sinha zaheer iqbal pregnant

சோனாக்ஷி சின்ஹா: இவர், ஜாகீர் இக்பாலை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் 2022ஆம் ஆண்டு டபுள் எக்ஸ்எல் படத்தின் சேர்ந்து நடித்தபோது காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன் 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர். படவிழாக்கள், பொது நிகழ்வுகள் என பல இடங்களில் இருவரும் ஜோடியாக திரிந்த வீடியோக்களை இணையத்தில் பார்க்க முடிந்தது.

காதல் திருமணம்: பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு கடந்த ஜூன் மாதம் காதலர் ஜாகிர் இக்பாலுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின், சோனாக்ஷி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிடுவார் என வதந்தி பரவியது.இதுகுறித்து பேசிய ஜாஹீரின் தந்தை, அவர் மதம் மாறவில்லை, அது நிச்சயம் நடக்காது. அவர்களுடையது இதயங்களின் ஒன்றான பின் மதத்திற்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா: இந்நிலையில், சோனாக்ஷி சின்ஹா ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாகவும், திருமணத்திற்கு முன்பே அவர் கர்ப்பமாகி விட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதற்கு காரணம், சோனாக்ஷி சின்ஹா, தீபாவளி அன்று கையில் நாய் குட்டியை வைத்துக்கொண்டு கணவருடன் வாழ்த்து சொல்லி இருந்தார். அந்த போட்டோவில் சோனாக்ஷி சிவப்பு நிற அனார்கலி உடையை லூசாக அணிந்து இருந்தார். அதைப்பார்த்த இணையவாசிகள், பேபி பம்ப்பை மறைப்பதற்குத்தான் அந்த உடையை அவர் அணிந்து இருக்கிறார் என்று வதந்தி பரவியது. அந்த செய்தி உண்மையா, பொய்யா என்று கூட யோசிக்காமல் பலர் இணையத்தில் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், சோனாக்ஷி சின்ஹா கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X