“மறக்க முடியாத பல கசப்பான சம்பவங்கள்“.. பேட்டியின் போது உணர்ச்சிவசப்பட்ட சன்னிலியோன் !

மும்பை : என் கடந்த கால வாழ்க்கையில் மறக்க முடியாத பல கசப்பான சம்பவங்களை நான் சந்தித்து இருக்கிறேன் என்று உணர்ச்சி பொங்க பேசி உள்ளார் சன்னி லியோன்

சன்னி லியோன் தமிழ் , தெலுங்கு,இந்தி, கன்னடம், மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமான நடிகையாக உள்ளார்.

அனாமிகா என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். ஏஜென்ட் எம் என்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்துள்ள வெப்சீரிஸுக்கான புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

ஆபாச படங்கள் மூலம் பிரபலமாகிய சன்னி லியோன். இவர் பெரும்பாலும் சர்ச்சைகள் நிறைந்த விஷயத்தில்தான் மீடியாக்களில் அடிபடுவார். பணத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்வார் என்பது அவரின் மீதுள்ள குற்றச்சாட்டு. அவர் ஒரு பாடலுக்காவது கவர்ச்சி குத்தாட்டம் போட மாட்டாரா என படத்தயாரிப்பாளர்கள் தவம் இருப்பார்கள்.

குழந்தையை தத்தெடுத்துள்ளார்

குழந்தையை தத்தெடுத்துள்ளார்

இவர், 2018 ல் டேனியல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் கொரோனா நேரத்திலும் ஏழை மக்களுக்கு பல உதவிகளையும் செய்துள்ளார்.

கசப்பான சம்பவம்

கசப்பான சம்பவம்

ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளக சன்னி லியோன், எனக்கு இருக்கும் வாழ்க்கையை நான் அனுபவித்து வாழ்க்கிறேன், ஆனால், கடந்த காலத்தில் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பல கசப்பான சம்பவங்கள் நான் சந்தித்து இருக்கிறேன்.அந்த நேரத்தில் நான் எடுத்த முடிவுகளை வேறு யாரும் எடுக்கக்கூடாது, அந்த வாழ்க்கையை தான் விரும்பவில்லை. ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், அந்த நேரத்தில் என் மனதிற்கு உண்மையானவளாக இருந்து இருக்கிறேன்.

எந்த தயக்கமும் இல்லை

எந்த தயக்கமும் இல்லை

நான் என் மனதிடம் எப்போதும் பொய் கூறியது இல்லை. மற்றவர்களிடமும் பொய் சொன்னது இல்லை. நான் யார் என்பதை வெளிப்படையாக கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால், வாழ்க்கையில் நான் கடந்து வந்த கசப்பான அனுபவம் தான் இப்போது எனக்கு நல்ல வாழ்க்கை அமைந்து இருக்கிறது. என் கணவர் டேனியல் என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளார். நாங்கள் இருவரும் வேலை, குடும்பம் குறித்து அதிக நேரம் பேசுவோம் குடும்பத்தோடு நேரத்தை செலவிடவே அதிகம் விரும்புகிறோம். இப்போது வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X