புது பிஸ்னஸில் களமிறங்கும் சன்னி லியோன்.. பார் முதல் சகல வசதிகளும் கொண்ட பிரம்மாண்ட ஓட்டல்!
சென்னை: ஆபாசப் பட நடிகையாக இருந்து இப்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகக் கலக்கி வருபவர் சன்னிலியோன். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறிய சன்னி லியோன் தற்போது புது பிஸ்னஸ் ஒன்றை தொடங்கி உள்ளார்.
கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சன்னி லியோன். இவர் அடல்ட்ஸ் ஒன்லி அதாவது கசமுசா படங்களில் நடித்து பிரபலமானார். இவர் வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்த போது, ஆபாச நடிகை இந்த படத்தில் நடிக்கக்கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து, யுவன் இயக்கத்தில், சன்னி லியோன் OMG படத்தில் நடித்தார். திகில் மற்றும் காமெடி நிறைந்த இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். அவருடன் இணைந்து காமெடியன் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் மற்றும் ஜிபி முத்து உள்ளிட்ட பலரும் நடித்தனர்.
கணவருடன் இணைந்து பிஸ்னஸ்: சினிமாவில் நடித்துக்கொண்டே தனது கணவர் டேனியேல் வெப்பருடன் இணைந்து ஆடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை வியாபாரம் செய்து வந்தார் சன்னிலியோன். அது மட்டுமில்லாமல், பிரபல பிராண்ட்களின் விளம்பர மாடலாகவும், சொந்தமாக மொபைல் போன் பிராண்ட் ஒன்றைத் தொடங்கினார். இந்த மொபைல் வியாபாரத்தை சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து பெரிய அளவில் நடத்தினார்.
சகல வசதி உடைய ஹோட்டல்: சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல், பிஸ்னஸ் உமனாக இருக்கும் சன்னி லியோன் தற்போது, உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் புதிய ஆடம்பர ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதில் பார் முதல் சகல வசதிகளும் இருக்கிறதாம். சன்னி லியோன் துவங்கியிருக்கும் இந்த நட்சத்திர ஹோட்டலுக்கு சிக்கா லோகா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட ஹோட்டலில் நபர் ஒருவர் 1000 ரூபாய் செலுத்தினால் அனைத்து வகையான உணவும் அன்லிமிடெட்டாக கிடைக்குமாம். உத்தரபிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கிளை, கூடிய விரைவில் இந்தியாவின் பல மாநிலங்களில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











