கல்யாணம் செஞ்சாதான் குழந்தை பிறக்குமா?திருமணம் தேவையில்லாத ஒன்று..பரபரப்பை கிளப்பிய நடிகை தபு!

சென்னை : குழந்தை பெற்றுக்கொள்ள திருமணமாகி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் என்று நடிகை தபு ஒரு பேட்டியில் அதிரடியாக கூறியுளளார்

பாலிவுட்டில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான பஜார் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு. இந்தப் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தபு.

தொடர்ந்து பல்வேறு படங்களில் கிடைத்த வேடங்களில் நடித்த தபு, 1994ஆம் ஆண்டு வெளியான விஜய்பாத் என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதையும் வென்றார்.

நடிகை தபு

நடிகை தபு

பாலிவுட் நடிகையான தபு தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டே, சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் தபு நடித்துள்ளார். இவருக்கு 50 வயதான போதும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்குளாகவே உள்ளார்.

கல்யாணம் செஞ்சாதான் குழந்தை பிறக்குமா?

கல்யாணம் செஞ்சாதான் குழந்தை பிறக்குமா?

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டில் அளித்த நடிகை தபு, குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அதில், அனைத்து பெண்களைப் போல் எனக்கும் தாயாக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதற்காக கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. திருமணம் செஞ்சிக்காமலே கர்ப்பம் ஆகலாம்.

திருமணம் அவசியமில்லாத ஒன்று

திருமணம் அவசியமில்லாத ஒன்று

எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றினால் நான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வேன். என்னைப் பொறுத்தவரை திருமணம் அவசியமில்லாத ஒன்று. குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையே இல்லை என தபு தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கைதி ரீமேக்கில்

கைதி ரீமேக்கில்

தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது அஜய் தேவ்கன் இயக்கத்தில் உருவாகும் கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் போலீஸாக நடித்து வருகிறார். தபு தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போது நடிகர் நாகார்ஜூனாவும் தபுவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X