திருமணம்னா என்னனு தெரியுமா? வித்யா பாலனின் அதிரடியான பதில்!

மும்பை: பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்கிறார் நடிகை வித்யா பாலன். இவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததற்காக டர்டி பிக்சர் படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்த இவர், திருமணம் குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்

2003ம் ஆண் பாலோ தோகோ என்ற வங்காளத் திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயத்தைத் தொடங்கினார் வித்யாபாலன். இதையடுத்து இந்தியில் தனது அறிமுகத்தை கொடுத்த இவர், பரினீதா திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.

Bollywood actress Vidya Balan opens up about marriage

வித்யா பாலன்: அதையடுத்து லகே ரஹோ முன்னாபாய், ஹே பேபி மற்றும் பூல் மலையா, ஓம் சாந்தி ஓம் ஆகிய படங்களில் நடித்தார். இதைத்தொடர்ந்து, மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய வித்யாபாலன், பல இடத்தில் சில்க் ஸ்மிதாவை கண்முன் கொண்டுவந்தார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார். அந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

காதல் திருமணம்: நடிகை வித்யா பாலன் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென உடல் எடை அதிகரித்து காணப்பட்டு பல உருவகேலியை எதிர்கொண்டார். இதையடுத்து,யுடிவு நிறுவனத் தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான சித்தார்த் ராயை காதலித்து வருவதாகவும் அவருடன் டேட்டிங் செல்வதாகவும், வெளிப்படையாக அறிவித்தார். இதையடுத்து இருவரும், 2012ம் ஆண்டு மும்பை பாந்த்ரா நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

திருமணம் ஓர் புனிதமான விஷயம்: இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள வித்யாபாலன், திருமணம் குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். அதில், நமது இந்திய கலாசாரத்தில் திருமணம் என்பது இன்னும் வாழ்க்கையில் ஒரு புனிதமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில், தமிழக மக்களிடம் திருமணம் என்பது இன்னும் அதற்குண்டான கௌரவத்தை இழந்து விடவில்லை. ஒரு சிலர் அந்த திருமணத்தை பெரிய பொருட்டாக மதிக்காத போதும், இன்னும் பெரும்பாலான மக்கள் திருமணத்தின் முக்கியத்துவத்தையும், அதன் பெருமையையும், அதன் மரியாதையையும் உணர்ந்தவர்களாகவே உள்ளனர்.

முக்கியமானது: ஆனால், சில நடிகைகள் திருமணம் என்பதை, ஏதோ வேடிக்கை நிறைந்த ஒரு ஜாலியான விஷயம் போல பார்க்கிறார்கள். உண்மையில் திருமணம் என்பது மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, பிள்ளைகளின் எதிர்காலம் என பல விஷயங்களை, வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஒரு திருமணம் வாயிலாக, எத்தனையோ புதிய உறவுகளை அதில் நாம் பெறுகிறோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X