twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “பெண்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை“.. கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய் பேச்சு !

    |

    பிரான்ஸ் : கேன்ஸ் திரைப்படவிழாவில் பேசிய ஐஸ்வர்யா ராய், பெண்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்றார்.

    மே 17ந் தேதி கோலாகலமாக தொடங்கி இந்த சர்வதேச திரைப்பட விழா மே28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இவ்விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம், மிஷிங் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழ் மற்றும் ஹாலிவுட் என 600க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன.

    கேன்ஸ் திரைப்பட விழா

    கேன்ஸ் திரைப்பட விழா

    இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர். இதில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் கமல்ஹாசன், நடிகர் மாதவன், தமன்னா, வாணி திரிபாதி, கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஐஸ்வர்யா ராய் பேச்சு

    ஐஸ்வர்யா ராய் பேச்சு

    இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராய், பெண்கள் இல்லாமல் திரைப்படம் இல்லை. பெண்களுக்கு ஊக்கத்தை கொடுக்க வேண்டும், அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும். ஒரு படத்தில் பெண்களின் பங்கு திரைக்கு முன்னும் பின்னும் எங்கேயுமே தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே ஆண், பெண் என வேறுபாடின்றி திறமைக்கு மட்டுமே ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். இந்த விழாவிற்கு ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ஐஸ்வர்யா ராய் பச்சன் மலர்களால் ஆன 3டி கவுன் அணிந்து இருந்தார். எப்போதும் வசீகரமாக இருக்கும் ஐஸ்வர்யாவிடம் இந்த முறை அந்த வசீகரம் இல்லை என்று நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், பெண்கள் குறித்து ஐஸ்வர்யா ராய் பேசியது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

    தீபிகா படுகோனே

    தீபிகா படுகோனே

    முன்னதாக நேற்று நடைபெற்ற இந்திய பெலிலியன் திறப்பு விழாவில் பேசிய தீபிகா படுகோனே, இந்தியாவின் வளர்ச்சி மகத்தானதாக உள்ளது. இது ஆரம்பம் மட்டுமே.. இந்தியர்கள் கேன்ஸ் விழாவில் பங்கேற்பது என்ற நிலை மாறி, இந்தியாவில் கேன்ஸ் விழா விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

    English summary
    Former Miss World and Bollywood actress Aishwarya Rai Bachchan speech at the Cannes Film Festival 2022.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X