கமல் படத்தின் இந்தி ரீமேக்... யாரு நடிக்கறாரு தெரியுமா... விரைவில் அறிவிப்பு!

மும்பை : கமல் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டில் வெளியான படம் ஹே ராம். இந்தப் படத்தை கமல் இயக்கி தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர் ஷாருக்கானும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக்காக உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஹே ராம் படம்

ஹே ராம் படம்

உலக நாயகன் கமல்ஹாசன், ராணி முகர்ஜி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 2000ல் வெளியான படம் ஹே ராம். படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வசுந்துரா தாஸ், அதுல் குல்கர்னி, ஹேமாமாலினி, ஓம்பூரி மற்றும் நாசர் உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

முக்கிய கேரக்டரில் ஷாருக்கான்

முக்கிய கேரக்டரில் ஷாருக்கான்

இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த ஷாருக்கான் அதற்காக சம்பளமே பெற்றுக் கொள்ளவில்லை. இந்தப் படம் இந்தியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெளியாகி தற்போது 22 ஆண்டுகளை கடந்துள்ளது.

கமல் இயக்கம் + தயாரிப்பு

கமல் இயக்கம் + தயாரிப்பு

இந்தப் படத்தை கமல்ஹாசன் இயக்கி தயாரித்திருந்தார். இளையராஜா இசையில் படத்தின் பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன. இந்தப் படம் கடந்த 2018லேயே இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்தி ரீமேக் உரிமை

இந்தி ரீமேக் உரிமை

இந்நிலையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தற்போது ஷாருக்கான் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை இந்தி ரீமேக் செய்து அதில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பான விமர்சனங்கள்

சிறப்பான விமர்சனங்கள்

கடந்த 2000ல் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் சுமாரான வெற்றியையே பெற்றது. சாதாரண ரசிகர்களை இந்தப் படம் சென்றடையவில்லை. ஆனால் இந்தப் படம் மிக சிறப்பான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஷாருக்கான் பெற்ற ரீமேக் உரிமை

ஷாருக்கான் பெற்ற ரீமேக் உரிமை

இந்த ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் ஷாருக்கானும், ஷாருக்கான் நடித்திருந்த கதாபாத்திரத்தில் கமலும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஷாருக்கானுடன் எப்போதுமே சிறப்பான நட்பை மெயின்டெயின் செய்துவரும் கமல், ஹேராம் படத்தின் ரீமேக்கை அவருக்கு கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X