பாலிவுட் பாட்ஷாவின் பிறந்தநாள் இன்று... பிரபலங்கள் வாழ்த்து!

மும்பை : பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

தன்னுடைய மகன் கைதால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு இன்று பிறந்தநாள்.

80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் இன்றுவரை தனது மார்கெட்டை நிலையாக வைத்துக் கொண்டுள்ளார்.

பாலிவுட் பாட்ஷா

பாலிவுட் பாட்ஷா

பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷாருக்கான். 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 14 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். இளம் வயதில் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டிய ஷாருக்கான் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அந்த எண்ணத்தை கைவிட்டார்.

தீவானா படத்தில் அறிமுகம்

தீவானா படத்தில் அறிமுகம்

1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன்மூலம் சிறப்பான கவனம் பெற்ற ஷாருக்கான், பின்பு தீவானா என்ற படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்று வெள்ளித்திரையில் கால்பதித்தார். தொடர்ந்து சமத்கார், தில் ஆஷ்னா ஹை, ராஜூ பன்கயா ஜென்டில்மேன போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

காதல் படங்கள்

காதல் படங்கள்

தொடர்ந்து தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, தில் தோ பாகல் ஹை போன்ற காதல் படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. பாலிவுட்டின் சிறப்பான ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள இந்தப் படங்கள் இவருக்கு சிறப்பாக உதவின.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில் இன்றைய தினம் அவர் தனது 56வது வயதை பூர்த்தி செய்துள்ளார். அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார்.

மன உளைச்சலில் ஷாருக்

மன உளைச்சலில் ஷாருக்

கடந்த ஒரு மாத காலமாக தன்னுடைய மகன் கைதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார் ஷாருக்கான். போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் அவரது மகன் ஆர்யன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பெயில் கிடைத்துள்ளது.

ஆறுதல் அளித்த பிரபலங்கள்

ஆறுதல் அளித்த பிரபலங்கள்

இதையடுத்து தற்போது ஷாருக்கான நிம்மதி அடைந்துள்ளார். பல்வேறு மன உளைச்சல்கள், நெருக்கடிக்கு இடையில் தன்னுடைய மகனை தற்போது மீட்டுள்ளார் ஷாருக்கான். இந்த நேரத்தில் அவருக்கு பல பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு அளித்தனர். சல்மான் கானும் அவரது வீட்டிற்கே சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X