twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலிவுட்டில் அதிரடி கிளப்பிய தென்னிந்திய படங்கள்.. சிறப்பை காட்டத் தவறிய முன்னணி ஹீரோஸ்!

    |

    மும்பை : இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இதில் பல சிறப்பான படங்கள் வெளியாகி அதிரடியை கிளப்பி வருகின்றன.

    பாலிவுட்டில் இந்த ஆறு மாதங்களில் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் உள்ளிட்டவர்களின் படங்கள் ரிலீசாகின.

    ஆனால் இந்தப் படங்கள் எந்தவகையிலும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் பெரிய அளவில் வசூலிக்கவில்லை.

    ஹேம்நாத்தை வெளியே விடாதீங்க...விஜே சித்ராவின் தந்தை கோர்ட்டில் புதிய மனு ஹேம்நாத்தை வெளியே விடாதீங்க...விஜே சித்ராவின் தந்தை கோர்ட்டில் புதிய மனு

    2022 அரையாண்டு

    2022 அரையாண்டு

    2022 ஆண்டின் முதல் பாதி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த ஆறு மாதங்களில் இந்திய அளவில் பல அதிரடி படங்கள் ரிலீசாகியுள்ளன. இதில் சிறப்பான பல படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவையாக அமைந்து வசூலிலும் சிறப்பான இடங்களை பிடித்தன. பாலிவுட்டிலும் இந்த ஆறு மாதங்களில் அக்ஷய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகின.

    ரசிகர்கள் விருப்பம்

    ரசிகர்கள் விருப்பம்

    கொரோனா பாதிப்பு இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்த நிலையிலும் திரையரங்குகளில் ரசிகர்கள் தங்களது விருப்பத்திற்குரிய ஹீரோக்களின் படங்களை பார்ப்பதில் இருந்து விலகவில்லை. எப்போதும் பாலிவுட்டில் முதல் 6 மாதங்களின் மொத்தப் படங்கிளின் வசூல் 2300 கோடிகளை தாண்டும்.

    குறைந்த வசூல்

    குறைந்த வசூல்

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அந்த எண்ணிக்கை 2000 கோடியாக குறைந்துள்ளது. இதில் கேஜிஎப்2, ஆர்ஆர்ஆர் படங்களின் கலெக்ஷன் மட்டுமே 1000 கோடிகளை எட்டியுள்ளது. குறிப்பாக இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கேஜிஎப் 2 படம் மட்டுமே 434.70 கோடி ரூபாய்களை இந்த முதல் பாதி ஆண்டில் வசூலித்துள்ளது.

    அதிரடி காட்டிய தென்னிந்திய படங்கள்

    அதிரடி காட்டிய தென்னிந்திய படங்கள்

    இதனிடையே ஹிந்தியில் வெளியான ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் முதல் அரையாண்டில் 274.31 கோடி ரூபாய் கலெக்ஷனை ஈட்டியுள்ளது. மாறாக பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்கள் தற்போது தங்களது ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    வசூலிக்க தவறிய பாலிவுட் படங்கள்

    வசூலிக்க தவறிய பாலிவுட் படங்கள்

    இந்தியில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் தி காஷ்மீர் பைல்ஸ் படம் 252.90 கோடி ரூபாய் கலெக்ஷனை மட்டும் வசூலித்தது. இதேபோல ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியாவாடி படம் மொத்தமாக 129.10 கோடி ரூபாய்களையும், பூல் பூலையா 2 படம் 184.32 கோடி ரூபாய்களையும் மட்டுமே வசூலித்துள்ளது.

    ஏமாற்றிய முன்னணி நடிகர்கள்

    ஏமாற்றிய முன்னணி நடிகர்கள்

    முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியான வசூலை செய்யவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பச்சன் பாண்டே வெறும் 49.98 கோடி ரூபாய் கலெக்ஷனையும், ஷாகித் கபூரின் ஜெர்சி 19.68 கோடி ரூபாய்களையும், அஜய் தேவ்கனின் ரன்வே 34 படம் 32.96 கோடி ரூபாய்களையும் மட்டுமே வசூலித்தது.

    ஏமாற்றத்தில் தயாரிப்பாளர்கள்

    ஏமாற்றத்தில் தயாரிப்பாளர்கள்

    பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்தவர்களுக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்தது. ரன்வீர் சிங், கங்கனா ரணாவத் படங்களும் பெரிய அளவில் வசூலிக்கவில்லை. மேலும் ரசிகர்களை இந்தப் படங்கள் கவரத் தவறியுள்ளன. தென்னிந்திய மொழிப் படங்களை நம்பி விநியோகம் செய்தவர்கள் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியுள்ளனர்.

    ரசனை மாற்றம்

    ரசனை மாற்றம்

    இந்த மாற்றம் பாலிவுட்டில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. ரசிகர்களின் ரசனையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், எதையும் கணிக்க முடியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற சூழலில் பாலிவுட் காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்தடுத்த ஹீரோக்களின் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

    எதிர்பார்ப்பில் பிரம்மாஸ்திரம்

    எதிர்பார்ப்பில் பிரம்மாஸ்திரம்

    இதனிடையே அடுத்த அரையாண்டு பாலிவுட் ஹீரோக்களுக்கு சிறப்பாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆலியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகவுள்ள பிரம்மாஸ்திரம் போன்ற படங்கள் இந்தி படங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    English summary
    KGF2 and RRR movies collects half of the collections in Bollywood box office
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X